பக்கம்:பூ மணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 45

  • லார், தபால்’’ என்று சொல்லி, ப்யூன் அன்றைத். தபால்களேத் தட்டில் கொண்டுவந்து மே ைஜமீது வைத்துச் சென்ருன். அவைகளையெல்லாம் மேலெழுந்தவாரியாகக் கண்ணுேட்டமிட்ட டைரக்டர் ராஜேந்திரன் குறிப்பிட்ட சில தபால்களே மாத்திரம் முதலில் உடைத்துப் பார்க்கலா ன்ை. அவைகள் அழகான புகைப் படங்களைத் தாங்கி வந்திருந்தன. to

அடுத்து எடுக்கவிருக்கும் படத்திற்கு புது முகங்கள் தேவை’ என்று நாளிதழில் விளம்பரம் செய்திருந்தார்கள். அதற்குப்பேட்டிக்குப் போட்டியிட்டு வந்தவை அவை, அந்த ஒரு புகைப்படத்தை ராஜேந்திரன் பார்த்ததும், காண்பது கனவா, நனவா, என்ற நிலே எழுந்ததுபோல, அப்படிச் சிலேயாக மலேத்து உட்கார்ந்து விட்டான். படத்தின் அடியில் எழுதியிருந்த ‘மாயா என்ற எழுத்துக் களைப் படித்த அவனுக்கு எதுவுமே தோன்றவில்லை. படத்தைப் பார்த்த கணம் நிலவியிருந்த அமைதி, படத் தின் பெயரைப் பார்த்த மாத்திரத்தில் நிலே பெயர்ந்து அழிந்துபோனது. 6 &toir tijff 13 ? பேழையில் பதிக்கப்பட்ட நித்திலம்போல, பூலோகத் தில் இடம்மாறிக் குதித்துவிட்ட தேவ கன்னிகை ரம்பை போல், தவழும் பால் நிலவில் மின்னல் படருகையில் நெளியும் மயக்க எழில்போல அவள் உருவம் காணப் பட்டது. மாயமோகினியாகவே இருந்தாள் அவள். தன் மனைவி பூமாவை அப்படியே வடித்தெடுத்தது மாதிரியிருந்தது மாயாவின் தோற்றமும். முகவரியைப் பார்த்தான்; நடிகை ஒருத்தியின் மேற்பார்வை விலாச மிருந்தது. ரேடியோவில் வெளிநாட்டு ஒலிபரப்பில் ஐரோப்பிய சங்கீதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எந்த நினேவும்: அற்றவன்போல ராஜேந்திரன் சுழல் நாற்காலியில் சுழன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/151&oldid=835419" இலிருந்து மீள்விக்கப்பட்டது