பக்கம்:பூ மணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டு : புதிர், புதிர்தான? மின்னும் பொன்னில் வார்த்தெடுத்த வண்ண ஒவியம் அது. வண்ணம் பரப்பி, வாழ்வு பரப்பி நிற்கும் பேசும் சித்திரம் அது. ஆனால் பேசாமல் கிடந்தது; கண் வளர்ந்து கொண்டிருந்தது மலர் விழிகளே மொட்டாக்கி, சிரிக்கும் உதடுகளைப் பூக்காத முல்லேயாக்கி தூளியில் நித்திரை செய்து கொண்டிருந்தது தங்கச்சிலே-பெண் தெய்வம்: அதையே இமைபாவாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லிகா. பார்க்கப் பார்க்க அவள் இதயம் அடங்கவில்லை; பின்னும் பார்த்தாள், முன் பார்த்த வழித்தடத்தினுடே பாசவெறி ஓயவில்லை. அவள் பார்த்துக்கொண்டே இருந் தாள். விரித்த அவளது நேத்திரங்களின் திரைவிரிப்பில் என்னவெல்லாமோ ஆசைக்கனவுகள் கோடு கிறுக்கி நெளிந்து ஓடின. அவள் தலே கிறுகிறுத்தது. அவள் நெஞ்சைப் பிளந்து வந்தது பெருமூச்சு. அது துன்பம் பாதியும் இன்பம் பாதியுமாகக் கணக்குச் சேர்த்திருந்தது. கதைகளில் மட்டுமே இடம் பெறக்கூடிய அளவுக்கு எல்லேக்கோடு கிழிக்கும் சில சம்பவங்கள் உண்டு. அப்படிப் புட்ட இனத்தில் சேரவேண்டியது, அன்று இரவு ஆவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/153&oldid=835423" இலிருந்து மீள்விக்கப்பட்டது