பக்கம்:பூ மணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 ழந்தையைக் கண்டது; காப்பாற்றியது. கனவு போலி ருந்தது; ஆல்ை கண்முன் நடந்தது. கற்பனைக்குக்கூட ஈடுகொடுக்க முடியாததொரு செயலேச் சாதித்து விட்ட தாகக் களிப்புக்கொண்டது அவள் பெதும்பை மனம்தாயின் அங்கம் வகித்த தாயுள்ளம். அவளுக்கே அந்தப் பதவி, உணர்வு, புது அனுபவம் எல்லாம் அதிசயமாகத் தான் இருந்தது. கதைகளில் மட்டுமே நடப்பதற்குச் சாத்தியமான சம்பவம் அவள் வாழ்வில்-குழந்தையின் வாழ்வில் ஏற்பட்டிருப்பதில் அவள் அதிசயித்துப் போள்ை. குழந்தையின் தாய் பூமாவைப்பற்றி அவள் ஆயிரம் தடவை எண்ணினுள். குழந்தையை அவள் அப்பா ராஜேந்திரனிடம் சேர்ப்பிக்கவேண்டும். இதுதானே பூமாவின் கட்டளை....? ஆளுல் அவள் கட்டளே-விண்ணப்பத்தை எப்படி நிறை வேற்றுவது.....?? புன்னகை உதிர்த்துக்கொண்டிருந்த கன்னிமேரியின் நினைவு, மல்லிகாவுக்கு அமைதியைப் பாடம் சொல்லித் தந்தது. அவள் குழந்தையைக் கண்டெடுத்த முன் இரவு பூராவும் குழந்தைக்குப் பாலூட்டிச் சீராட்டிப் பேணித் தனக்கு உதவி செய்த தெருத்தோழி அங்கயற்கண்ணிக்கு அவள் நிரம்பக் கடமைப்பட்டிருக்கிருள். பிஞ்சுக் குழந் தையைப் போஷிக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள் வதாக வாக்களித்ததைக் கேட்டதும், மல்லிகா அனே கடந்த சந்தோஷங்கொண்டாள். அன்றைக்கு இராப் பொழுது பூராவும் தூங்கும் குழந்தைக்குக் காவலாகத் தூங்காமல் கண் விழித்திருந்தாள் மல்லிகா. பல இரவு களேப் பகலாக்கிப் பூர்த்தி செய்திருந்த ஒற்றை ரோஜா? நாவலே மறுமுறை திருப்பிப் படித்து முடித்தாள். அவளுக்கு. நாவல் திருப்தி அளித்தது. - அன்றிரவு குழந்தையின் குரலே அவள் கேட்டிராமல் இருந்தால்......அவள் வாழ்வு என்னவாகியிருக்கும்? சிசுவின் கதிதான் என்னவாகியிக்ருகும் ? எத்தனை பயங்கரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/154&oldid=835425" இலிருந்து மீள்விக்கப்பட்டது