பக்கம்:பூ மணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 குழந்தை, மாயாவை இமைக்காமல் விழித்துப் பார்த்த வண்ணம் இருந்தது. மாயா குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருந்தாள். சற்றைக்கெல்லாம் காப்பி தயாரித்து வந்தாள் மல்லிகா. மாயா அருந்தினள். மாயாவிற்கு மல்லிகாவின் குணம் ரொம்பவும் பிடித்திருந்தது. தன்னிடம் ஈடுபாடு. கொண்டவள் மாயா என்பதை அறிந்தாள்; அத்துடன் அவளுக்கு இதயம் இருக்கிறதென்பதையும் கண்டு கொண்டாள். ஆகவே தன்னேப் பற்றியும், குழந்தையின் வரலாற்றைப்பற்றியும் வெளியிட்டாள் மல்லிகா, மாயா வருந்தினுள். மேல்லிகா, உங்கள் இலக்கியப்படைப்பை என்று' தருகிறீர்கள்? என் எண்ணக்கனவு வெற்றி காணுவது உங்கள் கையில்தான் இருக்கிறது?’ என்ருள் மாயா. அதற்குப் பதில்கூற யோசித்த தருணம் பார்த்து அலனக்குக் கடிதம் ஒன்று வந்தது. உவசரம் அவசரமாக உறையைக் கிழித்தாள். 'திருமதி மல்லிகா’’ எங்களது அடுத்த காணிக்கையின் படப்பிடிப்பிற்கு உங்கள் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கின்ருேம். உங்கள் வசம் புது நாவல் ஒன்று இருப்பதாகத் தமிழ்த், தொண்டு’ பத்திரிகையாளர் வாயிலாக அறிந்தே இக் கடிதம் எழுதுகிருேம். தங்கள் அன்பான-மேலான பதிலை. எதிர்பார்க்கிருேம். அத்துடன் சன்மானம் பற்றிப் பேசி முடிவு செய்யத் தங்கள் வரவையும் எதிர்நோக்கி யுள்ளோம். . ராஜேந்திரன் அழகோவியம் படத்தயாரிம் பாளர்கள், கோயமுத்தார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/160&oldid=835435" இலிருந்து மீள்விக்கப்பட்டது