பக்கம்:பூ மணம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#55 இக்கடிதம் அவளை நினைவு மறக்கச் செய்தது. ராஜேந் திரன்! ஆம்; அவராகத்தான் இருக்கவேண்டும். ஆகா, அவரிடம் பூமாவின் குழந்தையை-அவர் குழந்தையை நாளேயே சேர்த்துவிடலாம்; அவள் கட்டளையை நிறை வேற்றி விடலாம்... என்றெண்ணிய மல்லிகாவின் உடலெ ங்கணும் ஏதோ ஒர் மின்சக்தி இயங்கி ஓடுவதைப் போல உணர்ந்தாள் அவள். 'மாயா, இதோ பாருங்கள், கடிதம்வேந்திருக்கிறது. டைரக்டர் ராஜேந்திரன் என் கதையைக் கேட்டிருக்கிருர், கதையை அவருக்கு அளிப்பதில் என் முக்கியமானதொரு லட்சியமும் நிறைவேறும். இக்குழந்தை அவருடையது. அதை அவர் வசம் எப்படியும் சேர்த்துவிட்டால் அப்புறம் எனக்குக் கவலே கிடையது...”* டைரக்டர் ராஜேந்திரன? நான் கேள்விப்பட்ட துண்டு. நல்லவர் என்ருர்கள். மேலும் இன்னெரு அதிசயம் என்ன தெரியுமா? அவர் படமொன்றில் நானும் நடிக்க முயற்சி செய்து வருகிறேன். வெற்றி கிட்டலாம். உங்கள் கதையிலேயே நானும் நடிக்க வாய்ப்புப் பெற்ருல் அதுவும் பாக்கியமே...?? . 蠍。 சந்தர்ப்பம் தம் இருவரையும் இணைத்திருப்பது மல்லிகா வுக்குச் சினிமாக் காட்சியாகத் தோன்றியது. 'மல்லிகா, நீங்கள் தயை செய்து வேறு கதை யொன்றை எங்கள் படத்திற்குத் தரத்தான் வேண்டும். உரிமை பாராட்டிக் கேட்கிறேன்.:

  • ஆகட்டும், மாயா??

'இன்னென்று; இன்றே நான் கோயமுத்துருக்குப் பயணப்படுகிறேன். நீங்களும் என்னுடன் புறப்படுங்கள். குழந்தையை என்னுடையது போலக் க வ ணித் து க் கொள்கிறேன். அங்கு எனக்குத் தெரிந்த வீடு இருக்கிறது. நீங்களும் என்னுடன் தங்கலாம். நாளைக்கே டைரக்டரை யும் காணலாம்...? என்ருள் நடிகை மாயா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/161&oldid=835437" இலிருந்து மீள்விக்கப்பட்டது