பக்கம்:பூ மணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பது : கெஞ்சில் அலைகள் மாயா தன் அரும்பு இதழ்க்கரையில் புன்னகை அரும்பை முகையவிழச் செய்து இழையோடவிட்டிருந் தாள். உள்ளத்தை ஈர்க்கும் சொக்கும் புன்னகை அது. இப்படிப்பட்ட புன்னகைக் கீற்றுக்களே வசிய மருந்தாக பெண்களிடம் படைத்தவன் படைப்பித்திருப்பதால்தான் ஆண்களிடமும் புன்னகையைக் காணமுடிகிறது என்று சொல்கிறமாதிரியான ஒரு ரீதிப் புன்னகை அது. ராஜேந் திரன்-டைரக்டர் ராஜேந்திரனின் மனம் அந்தப் புன்ன கையில், புன்னகைத் தேவதை மாயாவிடம் தன் நிலை இழந்து கரைமீறித் தவித்ததில் வியப்பில்லே. மாயாவின் புகைப்படத்தைச் சுற்றிப் பதித்துவிட் டிருந்த பார்வை நெருக்கத்தை இன்னமும் ராஜேந்திரன் பிடிதளர்த்தவில்லை. பிரிந்திருந்த விழி வட்டங்களின் நோக்கிலே மாயாவின் போட்டோ சுழன்று கொண்டிருந் தது. படங்களில் காட்டுகிருர்களே அதுபோல. அன்று அவள் படத்தைக் கண்டது தொட்டு டைரக்டரின் மனம் வெகுவாகச் சலனமடைந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/163&oldid=835440" இலிருந்து மீள்விக்கப்பட்டது