பக்கம்:பூ மணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ‘மாயாவின் ரூபத்தில் என் பூமாவைத் தரிசிக்கிறேன். நிஜமாகவே மாயா, என் பூமாவாகவே இருந்து விட்டால்...! : தான் எண்ணுவது போல மாயா தன் பூமாவாகவே இருக்கவேண்டுமென்ற தீராத தாபம் தழைத்து நின்றது. பூமாவையும், குழந்தையையும் பற்றியே அவன் நினேவுகள் எந்நேரமும் அம்மானே பாடின. சென்னேத் தலைமை ஸ்டுடியோவிலிருந்து வந்திருந்த சில கடிதங்கள் அவன் பதிலுக்குக் காத்திருந்தன. மல்லிகா, திரைப் படத்துக்குத் தன் நாவலே அனுப்புவ தாக எழுதிய பதில் கடிதம் நினைவு வந்தது. அவனுக்கு. ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லேயே இல்லே. எங்கும் அமைதி. அவன் உள்ளம்கூட அமைதியைப் பரிபாலித்து வைத்திருந் தது. மேஜைமீது ஸ்டாண்டி’ல் வைத்திருந்த பூமாவின் படத்தைப் பார்த்தான். பார்த்த கண்கள் இன்பச்சரம் தொடுத்தன. பூமாவின் படமும், அன்று வந்த மாயாவின் படமும் அருகருகே இருந்தன. ஒன்றையும் மற்ருென்றை யும் இணையாக்கி, எடை போட்டான். ராஜேந்திரனின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றைச் சொல்லி அமைதியையும் வழிகாட்டியது. அந்த ஒன்று...... ! டைரக்டருக்கு புரிந் தால்தானே...... ! அவன் மனம் மாத்திரம் அமைதியுடன் அலேந்து கொண்டிருந்தது. கானலில் நிழல் தேடி மட்டும் அலேயாமல் இருந்தால்.....! - நடிகைகளின் பேட்டி நடந்து மாயாவை இன்னு ரென்று அறியும் வரை டைரக்டர் ராஜேந்திரனுக்கு உடலில் உயிர் நிலைக்காது. உள்ளத்தில் உயிர் படியாது. உடலி லும் உள்ளத்திலும் அமைதி விளையாது என்ற நிலை ஏற். பட்டது. பேட்டி காண கடிதங்கள் பறந்தன. 'அழகோவியம் படத் தயாரிப்பாளர்கள் அடுத்ததாக எடுக்கவிருக்கும் புதுப்படத்திற்கென வந்திருந்த புதுமுகங் களின் விண்ணப்பங்களுக்கு இணங்க, அன்று நடிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/164&oldid=835442" இலிருந்து மீள்விக்கப்பட்டது