பக்கம்:பூ மணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 களின் பேட்டி நடந்தது. அகராதி அழகு என்ற சொல் லுக்குப் பல பொருள்கள் விளக்கம் சொல்லுவதைப் போல அப்பொழுது அழகு, நடிகைகளின் பிரதிநிதியாக ஒளிசேர் நவமணிக் களஞ்சியமாகக் கண் சிமிட்டி நின்றது ; அழகி கள் கண் சிமிட்டி நின்றனர். நடிகை மாயா' வும் கண் சிமிட்டினுள் ; புனையாச் சித்திரம் பேசியது ; அந்த"தீர்ந்தமுகம் கதை சொன்னது. மின்னலில் பிறந்த தேவக்குமரி போலிருந்த அவளே ஒருமுறை கண் திறந்து பார்ப்பதற்குள் ராஜேந்திரன் பட்டபாடு அவன் ஒருவ னுக்கே தெரியும். அன்ருெரு நாள் முதல் இரவில் தனி யறையில் இதயத்தின் இதயமாக ராஜேந்திரனும், அவன். உயிர் பூமாவும் தனித்திருந்தார்களே, அந்த இன்ப நினைவு கள் மடலவிழ்ந்தன ; மனம் பரப்பின. ராஜேந்திரன் நிலை யிழந்து நெஞ்சிழந்து உழன்ருன். அவன் அவளேப் பார்த்த அதே நொடியில், அவளும் அவனைப் பார்க்கத் தவறவில்லை. இதை டைரக்டரும் அறிந்ததே. ஆனல் அவள்தான் தன் பூமா என்ற தீர்ப்பை அவன் மனம் கூறிலுைம், எடுத்த எடுப்பில் வாய் திறந்து ‘பூமா என்றழைக்க வலுவில்லே. மாயா- ஆம் அவள், பூமா கனவுப் பொருள் காட்சிப் பொருளாக அமையும் போது சந்தேகத்துக்கு வாய்ப்பு ஏது ? மாயாதான் பூமா என்பதற்கு அந்தப் பேசும் விழிகள் ஒன்றுமட்டுமே சாட்சி யம் சொல்லுமே ஆகா அந்த விழிகள். அந்தக் கண்கள்அந்த உதடுகள்-அந்தச் சிரிப்பு ஆம்; அவள் பூமா......! பேட்டி முடிந்தது. நடிகைகளின் பேட்டி முடிவு பின் தெரிவிக்கப்படுமெனக் கூறியதும் அவரவர்கள் கலந்தனர். மாயா தயங்கியவாறு அடியெடுத்து வைத்தாள். ராஜேந்' திரன் தன் ஆசைகளை அக்கணம் சிறை வைத்து மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. பூமாவின் கதியைப்பற்றி நினைந்து பிரளயகாலச் சூருவளியாகச் சுழன்ற அவன் மனம், பூமாவை உயிருடன் கண்டவுடன் குருவளி ஓய்ந்ததும் உலமும் அமைதி பெற்றது. அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/165&oldid=835444" இலிருந்து மீள்விக்கப்பட்டது