பக்கம்:பூ மணம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பென்ருல் பூமாவின் குழந்தை...... மறுபடியும் குழம்பியது மனம். நடிகை மாயாவின் உருவம் மறைந்த சில நிமிஷ ஓய்வின் பின், அவள் பேட்டியில் தேர்ச்சி பெற்றதாகவும், நடிகை ஒப்பந்தத்திற்கு ஆஜராக வேண்டுமென்றும் அவ ளுக்குக் கடிதம் ஆபீஸிலிருந்து பறந்தது. திரை மறைவில் நாடக அரங்கில் முன்னேறும் காட்சி களேப் போன்று தோன்றின. பூமாவின் வேஷம், அவள் போக்கு, தன்னைப் பார்த்த பார்வையில் பதிந்திருந்த ஏக்கத்தில் எத்தனே படாத காவியங்கள் மறைந்திருந் தனவோ...... ? சென்னேயிலிருந்து செக்ஸ்பிரஸ் 2 கடிதமொன்று வந்தது. பூங்குழலி ராஜேந்திரனுக்கு எழுதியிருந்தாள். 'அன்புள்ள கண்பர் ராஜா அவர்களுக்கு, நடிகை பேட்டிக்கு அங்கு தோன்றவிருக்கும் மாயா தான் உங்கள் பூமா. தெய்வம் தேடி வருகிறது. பொன் னை வாய்ப்பு. நழுவ விட்டுவிடாதீர்கள். நாளே நான், அத்தான், அப்பா எல்லோரும் வருகிருேம். நல்ல முடிவு இனி. எல்லாமே இனி சுபம் தான்...... ! பூங்குழலி.” அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நெஞ்சம் குலுங்கி விழுந்தது. • அப்பொழுது பணியாள் உள் ஹாலில் கிடந்ததாகச் சொல்லி டைரி ஒன்றை நீட்டிச் சென்ருன். வாங்கிப் பார்த்தான் ராஜேந்திரன். 'மாயா என்ற எழுத்துக்கள் மின்னின. உள்ளே படமிருந்தது. பூமாவின் புகைப் படம் 1.....அடியில் பூமா என்ற எழுத்துக்கள் இருந்தன. அக்கணம்தான் உண்மையிலேயே அவனுக்கு உயிர் வந்தது எனலாம், 'பூமா-1 ஆகா !!’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/166&oldid=835446" இலிருந்து மீள்விக்கப்பட்டது