பக்கம்:பூ மணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醒份亭 அழுகை பீறிட்டுவிட்டது. அவர் ஒருவர் எத்தனை உள்ளங்களேத்தான் வதக்கிப் பிழிவாரோ? அவரைப் பற்றிய ஒரு துப்பும் கிடைக்கவில்லையே! அவர் கண் காணுத தொலேவில் இருந்தாலும், கால் நடையாகவே சென்று கண்ணிரால் அவர் திருவடிகளைக் கழுவக் காத் திருக்கிருள் இந்த அபாக்கியவதி என்ற உண்மையை அவருக்கு யார் போய்ச் சொல்வார்கள்? 姿 懿 திருச்சி காலம் எத்தனே வேகமானது? என் பச்சைக் கிளியின் அழகு ஒன்றிலேயே மனம் ஒன்றிவிட்ட எனக்கு இத்தன் நாட்கள் பறந்து போனது ரசவாத வித்தை போலல்லவா தெரிகிறது? எதிர்பாராதவகையில் மகிழ்ச்சிக்குகந்த சில செய்தி கள் வந்தால் மனம் அடையும் குது கலத்துக்கும் கொம்மா ளத்துக்கும் பிடிப்பேது? அன்றைக்கு விஜயாவிடமிருந்து கடிதம் வந்தது. அவளைப் பார்த்து எத்தனே நாட்களோ ஆகியிருந்தன. கடித்தத்தில் என் கணவரைப்பற்றி எழுதியிருந்த வரிகளே க் கண்ட எனக்கு ஏதோ கனவுக் காட்சியாகவே தோன்றி யது. கோயமுத்தூரில் பூங்குழலியின் தந்தையின் ஸ்டுடி யோவில் உதவி டைரக்டராக இருக்கின்ற விவரத்தைத் தன் அத்தான் குமாரைக்கொண்டு புலனறிந்து எழுதியிருந்தாள் பூங்குழலி-ஆம்; அவள் அன்புப்பெண்; அவள் இந்நேரம் கன்னி நீங்கிக் கல்யாணப் பெண்ணுக, குடும்ப விளக்காகி யிருப்பாள். அவளது கல்யாணப் பத்திரிகையை என் கணவர் பார்க்கக் கூட முடியவில்லேயே... விஜயாவின் நட்புரிமை எவ்வளவு மாண்பு பெற்றது. என் உள்ளம் துள்ளி விளையாடியது. பாழ்வெளியாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/170&oldid=835456" இலிருந்து மீள்விக்கப்பட்டது