பக்கம்:பூ மணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 முடிந்திருக்குமோ? ஆல்ை என் இன்பக்கனி என்னேயே யல்லவா பார்த்துத் தீர்த்தது அப்போது. நான்தான் அவள் அம்மா என்று புரிந்துகொண்டிருக்குமோ ? என் அதிர்ஷ்டம் அப்பொழுதென்று மல்லிகாவுக்கு டைரக்டரிடமிருந்து-ஆமாம், என் கணவரிடமிருந்துகதை தேவை என்றும், ஒப்பந்தத்துக்கு உடனே புறப்பட வேண்டுமென்றும் கடிதம் வந்து சேர்ந்தது. நானும் அவர் எடுக்கும் படத்தில் நடிக்கப் போவதாகச் சொல்லி, என்னு டன் அவளேயும் புறப்படச் சொன்னேன். அவள் சரி? என்ருள். அம்மா : அப்போதுதான் எனக்கு அமைதி பிறந்தது. குழந்தையை-என் குழந்தையை எக்கணமும் பார்த்திருக்கலாமல்லவா ? அதன் போஷணேயைக் கவ னிக்க எனக்கா தெரியாது ? இந்த நாடகமெல்லாம் ஒன்றி சண்டு தினங்களுக்குத்தானே ? அப்புறம் என் குழந்தை என்ளுேடுதான். ஆம் ; பெற்ற மனம் பித்து ! கோவை Ф е ев е е е е в е е е с а மெய்தான் ! என் குழந்தை என்னுடன்தான் விஷ யத்தை விளக்கி மல்லிகாவுக்கு நன்றி சொல்லி அவளிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என் விளையாட்டிற்கு-விளை பாட்டல்ல. விஷயப் பரீட்சைக்கு ! நானும் இங்கு வந்ததுமுதல் மல்லிகாவைக் கவனித்து வருகிறேன். எந்நேரமும் ஏங்கிய மனத்துடன் விழிகளில் நீர் சோர, சோகமே வடிவாக வீற்றிருக்கிருளே......வாழ்க்கை அவளுக்கு வேம்பாகிவிட்டதா ? அதுதான் மனத்திற்குக் கூட அவள் ஒப்பவில்லேயோ......ஆம் மல்லிகா ஒரு லட்சியப்பிறவி வாழ்க்கை அனுபவம் கற்பித்த லட்சியமா அது ? விந்தை அல்லது விதியா ? வேடிக்கை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/175&oldid=835466" இலிருந்து மீள்விக்கப்பட்டது