பக்கம்:பூ மணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Î FÚ அன்று பேட்டிக்குப் புறப்பட்ட சமயம் என் உள் மனம் எப்படி அடித்துக் கொண்டது தெரியுமா ? ஏதோ அக்கினிப் பரீட்சைக்கு ஆளாவதைப் போல என் உள்ளுணர்வு ஊசி குத்தியது. என்னே அவர் அடையாளம் தெரியாதிருக்க முடியுமா ? அவர் அகத்தை முகம் பிரதிபலித்துவிடு மல்லவா ? உள் சலனத்தை உள்ளடக்கிவிடும் கல்நார் பெட்டியாக முடியாதா இந்த மனமும்......? கணவரின் முன்னேயே திரைமறைவு நாடக வேஷமா ? அதிசயம் தான் ! என் வாழ்க்கை கூட அதிசயப் பின்னல் தானே...... அன்று சாதாரணச் சம்பவத்துக்கே குற்றக்கூறி . அவர் இந்த என் துணிகரச் செயலுக்கு என்ன சொல்வாரோ? அவர் இதயம் என்னப்பற்றி எத்தகையத் தீர்ப்பை வழங் குமோ ?.......பட்டதெல்லாம் போதாதா ?.......எனக்குத் தாலிபாக்கியம் கிட்டுமா ?...... என்மீது கருணை காட்டினுல் சரி ; இல்லையேல் அவர் பாதங்களே கதி என்று காத்திருக்க மாட்டேன ? அவர் உள்ளம் அன்று மாறியதற்குக் காரணம் கேட்டு அதற்கு பிராயச்சித்தம் தேடிகுல்தானே எனக்கு ஆறுதல் குருத்து. விடும் ? குழந்தையை என்னிடமே மற்ருெரு சமயம் அனுப்பி டைரக்டரிடம் சேர்ப்பிக்கக் கூறுகிருள் மல்லிகா. அவள் கதையைத் தபாலில் அனுப்பியிருக்கிருள். ஆளுல் அவள் மூலம்தான் குழந்தையைச் சேர்ப்பிக்கச் செய்யவேண்டும். இல்லையெனில் என் நாடகம் அரை குறையாகிவிட்டால்?... 浓》 兹 燃 அத்துடன் முடிந்திருந்தது டைரி. மடைதிறந்த வெள்ளமாக டைரக்டர் ராஜேந்திரனின் இமைக் கால்வாய்களின் வழியே ரத்தக் கண்ணிர் பெருக் கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/176&oldid=835468" இலிருந்து மீள்விக்கப்பட்டது