பக்கம்:பூ மணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது : "மல்லிகா, நீ என் இதயராணி : டைரக்டர் ராஜேந்திரனின் நெஞ்சம் ஆனந்த முரசம் கொட்டி இன்பமுழக்கம் புரிந்து கொண்டிருந்தது. மனம் செப்பிடுவித்தை பல செய்யவல்லது ; அது அதன் சுற்றுப் புறச்சூழலே அனுசரித்தது. டைரக்டரின் குதுகல உள்ளத் திற்கு உடந்தை கொண்டது. அமைந்துகொண்ட காரணங் களே காரிய நிகழ்ச்சிகளாக மாற்றம் காட்டி, ஏற்றம் புரிந் தமைதான். என்றுமே அனுபவம் போதித்திராத அப்படிப் ப்ட்ட் இன்ப அமைதி அப்பொழுது அவனிடம் அடைக்கல மடைந்திருந்தது. வாழ்வு இன்ப முடிவாகத் தோற்றம் தந்தது. உண்மையிலே என் வாழ்வும் இன்பமுடிவு காட்டுமா ? என் பூமா என்னிடம் சேருவாளா ? என் குழந் தையின் முத்தம் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா ? இதைப்போல இன்னொரு என் கனவும் ஈடேறுமல்லவா?... அந்தக் கனவு......” w எண்ணிக் கொண்டிருக்கும்போதே கனவு கடந்த நனவாகி, கண்ட கன வின் சம்பவம் மனத்திரையில் பேசும் படமாகத் திரை விரிந்தது. நினைத்துப் பார்த்தான் ; நெஞ்சம் துள்ளியது. பூமா, அவள் குழந்தை, அத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/177&oldid=835470" இலிருந்து மீள்விக்கப்பட்டது