பக்கம்:பூ மணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 அந்த மூன்ருவது உருவம்-ஆம் அந்த மல்லிகா, மூவரும் அவனத்தேடி ஸ்டுடியோவிற்கு வந்தனர். தன் மனச்சாட்சி வாசித்த தீர்ப்புத் தாள்படி முடிவிட்டிருந்த அந்தக் கனவை -மல்லிகாவையும் தன் இதயப் பாவையாக்கிக் கொள்ளவேண்டுமென்றிருந்த அந்தக் கனவை வெளியிட் உான். ஆகா : மல்லிகா அடைந்த மகிழ்ச்சிதான் என்ன ? அதேபோல பூமா கொண்ட சந்தோஷம்தான் எத்தகை யது ? அப்படியென்ருல் கண்ட கனவு பலித்து விடு. மல்லவா?...... புதுமை நிறைந்த தியாக இதயம் அப்பொழுதுதான் தன் வசம் இடம் பெற்றிருப்பதாகப் பட்டது ராஜேந்திர லுக்கு. சிரித்துக்கொண்டான் ; உண்மையும் அதுதானே! ஆனந்தம் பள்ளுப் பாடியது. கண்மலர்கள் துடித்தன ; இதயம் அடித்துக்கொண்டது. மேஜை மீது வைத்திருந்த மலர்க்கொத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் தனி உரிமை பூண்டு சிரித்துக் கொண்டிருந்ந அந்த ஒற்றை ரோஜாப் பூவின் மணம் அவன் மனத்தைக் கிறக்கியது. பல நினைவு கள்-பரிகாரங்கள்-எதிர்காலத் திட்டங்கள் ; டைரக்டர் சிந்தனே வசப்பட்டிருந்தான். புயல் ஓய்ந்த அமைதி அவன் முகத்தில், நெஞ்சில், சூழ எங்கும் இருந்தது. ஒடு பிளந்த மாதுளேபோல, ஏடு புரளக் கிடந்தது அந்த டைரி. வாழ்த்தினன். அவனது ச ந் .ே த க ப் புயல்-மனத்தின் கொந்தளிப்பு எரிமலையை அமைதி படையச் செயததல்லவா அந்த டைரி ? மாயாவை பூமா என்று துப்புச் சொன்னதல்லவா அந்த டைரி ? இதோ, பூமாவை உரியவனிடம் சேர்ப்பிக்கப் போகிறதல்லவா அந்த டைரி ? பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்த அவ னுக்கு மறுநாள் விடிந்ததும், பங்களாவிலிருந்து தானே நேரில் போய்ப் பூமாவைக் காணவேண்டுமென்று ஆசை வுடன் இருந்தான் ராஜேந்திரன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/178&oldid=835472" இலிருந்து மீள்விக்கப்பட்டது