பக்கம்:பூ மணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 79 ஒரே மூச்சில் இன்னும் என்னவெல்லாமோ கேட்கத் துடித்தான் அவன். முடியவில்லே துக்கம் நெஞ்சைக் கவ் விக் கொண்டது. மதுமலரும் பொன் வண்டும் இன்ப அணேப்பில் மெய் மறந்தன. பையன் இரண்டு கிளாசில் கூல்ட்ரிங் கொண்டுவந்து கொடுத்தான். ஒருவரையொருவர் கணவன்-மனே விய தாகப் பார்வை பரிமாறியவாறு பானம் பருகிஞர்கள். காலத்தின் சேமநிதியிலிருந்து சில கண மின்னல் பொழுதுக்குள்ள விடிைகள் கடன் கொடுக்கப்பட்டன, வாழ்க்கையின் நியதிவழிக்கென. நான்காவது குடியரசு தின விழாவை ஒட்டி கோவைக் கல்லூரித் தமிழ்க் கலேக்கழக விழாவிற்கு டைரக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய செய்தி படங்களுடன் வெளியான பத்திரிகையில் அவன் நாட்டம் திலேததது. நிலேத்த பார்வை அடுத்துக் கிடந்த மற்ருெரு செய்தித் தாளுக்குத் திசை திரும்பியது. கோவை சகோதரிகளி:ன் நடன விழாவிற்குத் தலைமை பூண்டது பற்றி விபரம் இருந் தது அதில். அண்டி வந்த சூழ்நிலையில் தன்னே அண்டிக் கிடக்கும் நல்வாய்ப்புக்கள் அவனுக்குப் பெருமிதம் ஊடடின், பூமா, உன்னிடம் ஒரு வேண்டுகோளே எதிர்பார்க் கிறேன். நீ மறுக்கக்கூடாது. கணவன் கட்டிய மனேயா ளிடம் வேண்டும் வேண்டுகோளாக மதித்து என் வாக்குக்கு மதிப்புக் கொடு. மல்லிகா தெய்வக் குணம் வாய்ந்தவள். அன்று எங்கள் இருவரிடையே நிலவிய முதற் காதல்: இன்றேனும் வெற்றி பெற வேண்டும். அவல இதயத்தில் நான் ஒரு இடம் பெற்றுக்கொள்ள வேண்டும். மல்லிகா மலர்ச்சி பெற்ருல்தான் என் வாழ்வு மலரும் அவள் மன்னிப்பைப் பெற்ருல்தான் நான் மனிதனுக முடியும். என் மனச்சாட்சிக்கு அப்போதுதான் என்னுல் பதில் சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/185&oldid=835488" இலிருந்து மீள்விக்கப்பட்டது