பக்கம்:பூ மணம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£80 முடியும். அவளே அன்று கை விட்டதற்கு நான் அனுபவித்த வேதனை போதும். அதனுல்தானே உன் வாழ்வும் என் வாழ் வும் இத்தனே நாட்கள் இடைவெளி நின்று பல பல இன்னல் களுக்கு ஆளாக நேர்ந்தது அன்று அவளிடம் ஒடி விழத் தெம்பில்லே இன்று நான் மனிதனுக இருக்கிறேன். அனு பவமும் சந்தர்ப்பங்களும் படித்துத்தந்த வாழ்வின் சித்தாந்: தத்தின் துணேகொண்டு பூமா, என் இதய நாதம் கேட் கிறதல்லவா ? அன்றும் இன்றும் என் வாழ்வை உய்விப்ப வள் நீ ஒருவளே. தவருக எண்ணி விடாதே. என் வாழ் விலும், தாழ்விலும், இன்பத்திலும்-துன்பத்திலும் நீ என் னுடன் சமபங்கு கொண்டவள் ; மல்லிகா வாழ்ந்தால்தான் நான் வாழ முடியும். என் வாழ்வுதானே உன் வாழ்வும்...! மல்லிகாவை நான் எனது இன்னுெரு உயிர்த் துணையாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் என் உயிர்த்துடிப் பின் இரட்டை இயங்கும்-இயக்கும் சக்திகள். உங்கள் இருவரையும் என் இரண்டு கண்களாக மதித்து நடப்பேன். இது என் மனச்சாட்சி மீது ஆன. பூமா, தயை செய்து......?? ராஜேந்திரன் பேசவில்லே ; அவன் மனிதமனம் முன் நின்று பேசியது. கொப்புளிக்கும் உள்ளத்தின் குமுறும் உணர்ச்சிகள் நெஞ்சத்தை வார்த்தைகள் வாயிலாக அஞ்சல் செய்தன. புரளும் கண்ணிர் புனிதமாகிப் பேசியது. - பூமாவுக்கு இதயம் இருந்தது. அவள் இளகிள்ை. பெண் அவன் மனைவி. வாழ்க்கையில் அவனுடன் பங்கு, பெறப் பாத்தியதை பூண்ட பூமா.

  • அத்தான், தயை என்று ஏன் சொல்லுகிறீர்கள் ! உங்களை மீண்டும் அடையப் பாக்கியம் வாய்த்ததே என் தாலி பாக்கியம். உங்கள் வாழ்வுதானே என் நிறைவு ? உங்கள் கனவுதானே என் லட்சியம் ? அத்தான், மல்லி காவை நான் சில நாட்களாக நன்கு அறிவேன். ஆனல் நான்தான் தங்கள் மனைவி பூமா என்னும் அந்தரங்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/186&oldid=835490" இலிருந்து மீள்விக்கப்பட்டது