பக்கம்:பூ மணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$82 பூமா கடிதத்தை வாங்கினுள் ; அதில் டைரக்டர் சாஜேந்தி ன், என்று விலாசம் இருந்தது. உரியவருக்குக் கைமாறியது. ராஜேந்திரன் படித்தான் வாய் விட்டு. திரு. ராஜேந்திரன் அவர்களுக்கு, சங்கமம் பிரிவு வழிகாட்டி, வேறு திருப்பத்திற்குத் திருப்பி விடப்பட்ட மல்லிகாவிடமிருந்து நீங்கள் இந்தக் கடிதத்தைக்கூட எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள். என்ரு 'லும் எழுதுகிறேன். விழிவழி வழியும் கண்ணிரால், என்ரு கிலும் ஒருகணம் என் இதயத்தின் இதயம் தங்கள் பரிசோத னேக்குத் திறந்து காட்டப்பட வேண்டியதே. அந்த வேனே இப்போது வாய்த்திருக்கின்றது. காரணம், என் இதயம் அன்றிலிருந்து இன்றுவரை உங்களதாகவே இருந்து வருகிறது. வியப்பாகித் தோற்றம் தருகிறதா ? ஏன், நான் விந்தைப் பிறவி யெடுத்திருக்கின்ற காரணத்தி குலா ? மறந்து விட்டீர்கள்......? கரம் தொட்டுக் கண் தொட்டு நெஞ்சோடு நெஞ்சம் தொட்டு நிற்க, நம் இருவ ரிடையிலும் நிலவிப் பின்னிய அந்த இன்ப ஸ்பரிசத்தை யெல்லாம் நீங்கள் மறந்தா போனிர்கள் ? அந்த உணர்வு தானே இன்றுவரை என்னே உங்களவளாக்கி விட்டிருக் கிறது......! உங்கள் ஆசை முகமும் ஆசை உணர்வும் என்னுள் தோன்ருத நாளெல்லாம் பிறவா நாளாயிற்றே : என் இதயம் அப்படி ; காதல் அப்படி உணர்வு அப்படி : மண்ணில் பெண்ணுய்ப் பிறந்தேன் பொன் ரோஜா வாக, மனம் மூடி, மணம் பரப்பிட வேண்டிய வேளேயிலே முள் முளைத்தது, ரோஜா முள்ளே நொந்து என்ன பயன்? ரோஜாவுக்குத்தான் முள் ஆறுதல் சொல்லவல்லதா? அது தான் என் வாழ்க்கையைப் படைத்தவன் கிறுக்கிவிட்ட தீர்ப்பாயிற்றே...! - மாயாதான் உங்கள் பூமாவா? அவள் பாக்கியவதி; தங்களே மீண்டும் அடைந்து விட்டாள்; இந்த என் பிரார்த் தனக்காகிலும் தெய்வம் கண் திறந்ததே...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/188&oldid=835496" இலிருந்து மீள்விக்கப்பட்டது