பக்கம்:பூ மணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 83 நம் முதற் காதல்’ பிறந்த புண்ணிய நேரத்தினை வணங்குகிறேன்; வழிபடுகிறேன். அன்று தொட்டு நீங்கள் தான் என் நெஞ்சத்து ஆசை ராஜாவாக, அழகு ராஜா வாக அன்பாட்சி செலுத்துகிறீர்கள். ரோஜாவினுள் உறங்கும் போதை மணம்போல அல்லும் பகலும் ஆட்டம் போட்டுப் பாட்டுப் பாடிக்கொண்டு வருகிறீர்கள், என் கண்ணில் கருத்திலெல்லாம். நான் சொக்கிப் போகிறேன்; மட்டுப்படாத மகிழ்ச்சியில் என்னை மறந்து நான் திளேத்துப் போகிறேன். ஆகா, எத்தனே இன்ப உணர்ச்சிமிக்க தூய அனுபவங்கள்? எத்தனை அமுதமிக்க பார்வைகள் நினைக்க உடலெல்லாம் புல்லரிக்கிறதே... ஊன் கலந்து உயிர் கலந்து நான் வளர்த்த ஆசைக்கனவுகளல்லவா இவை! உயிர்பெற்று, உயிர்ப்பை மீட்டி என்ன வளர்த்த இன்பக் கனவு களல்லவா இல்ை: ஆகுல்... ஆம்; இப்போதுதான் தோன்றுகிறது; உணர்கிறேன். நினைத்தால் குலே நடுங்குகிறது. பூமா, சகோதரி, உனக்கு நான் என்றும் துரோகியாகி விடமாட்டேன். அதற்குத் தானே இந்த என் கடைசிக் கடிதம்...! குமைந்து என்னே வாட்டி வதைத்த பருவத்து இளமை உணர்ச்சிகளுக்கெல்லாம் என்ருே முடிவு சொல்லத்தான் முயன்றேன். ஆனல் சந்தர்ப்பங்கள் என்னைப் பூமிக்குப் பாரமாக்கிவிட்டன. அன்பரே, நான் தங்கள்பால் கொண்ட தூய அன்புக் காதலின் பெயரால் ஒரே ஒரு உரிமை மட்டும். வேண்டி திற்கிறேன். ஒரு காலத்தில் நான் தங்களின் மல்லிகாவாக இருந்ததுண்டு. அதுபோல என்றும் உங்கள் மல்லிகா வாகவே இருந்துவிடக் கனவு காணுகிறேன். தங்கள் இதயத்தில்-இதயத்தின் ஏதோ ஒரு மூலைப்பகுதியில்அதன் நிழல் ஒண்ட துளி இடமாகிலும் அபலே, இந்த அபாக்கியவதி மில்லிகாவுக்குக் கொடுப்பீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/189&oldid=835498" இலிருந்து மீள்விக்கப்பட்டது