பக்கம்:பூ மணம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகா, நீ என்றும் என் மல்லிகா தான்! என்று ஆசையுடன் அன்புடன் ஒரு சொல் சொல்வீர்களா? தொல்லே நெடுநாளாய்க் கண்ட இந்த ஒரே ஒரு கன வைத் தவிர உலகிலே எனக்கு எந்த ஆச பாசமும் இல்லே. அன்பரே, என்ன சொல்கிறீர்கள்? நான் நிஜமாக உங்கள் மல்லிகாதானு? ஆகா, நான் கொடுத்துவைத்த வள். உங்கள் நெஞ்சத்தில் என் நினேவு இடம் பெற்று விட்டதா? பாக்கியவதி; புண்ணியவதிதான் நான்...! என் காதல் தெய்வத் தன்மை பெற்றது; ஏனென்ருல் என் வரை நீங்கள் தெய்வம்; என் நெஞ்சிலே, நினேவிலே, உணர்விலே நீங்கள்தான் ஆட்சி செலுத்துகின்றீர்கள். காதல் வாசம் செய்யும் இடத்தில்தானே கடவுளும் இருக்க முடியும்? காதல்...ஆம்; என் காதல் கனல் ஆசைக் கனலாக இதோ என் உயிர்க்கனலேப்பற்றி எரியச் செய்யக் காத்திருக்கிறது...! - அன்பரே, தங்களிடம் நான் விடைபெற்றுக் கொள் கிறேன், தங்கள் மல்லிகாவாக-தங்கள் ஒருவரின் அந்த இன்பஸ்பரிச’த்துக்கே உரிய-அன்பு நெஞ்சத்துக்கே உரிய-கைபடாத ஒற்றை ரோஜாவாக. என் கண்களின் ஒரக்கோட்டில் க ண் ணி ர் மின்னுகிறதே என்று சிந்தனையா? அது ஆனந்தக் கண்ணிர், ராஜா. நான் உங்கள் நெஞ்சில் இடம் பெற்ற பின் எனக்குக் குறை இனி ஏது? - . ஆம்; வாழும் கனவுகள் இனி என்ன நிரந்தரமாக வாழ்த்தும்!. என் 'ஒற்றை ரோஜாப்பூ?? கதை பெறும் சன் மானத்தை என் அன்புக்காணிக்கையாக உங்கள் மகளுக்கு -என் மகளுக்குச் சமர்ப்பியுங்கள். உங்களிடம், சகோதரி. பூமாவிடம், குழந்தையிடம் போய் வருகிறேன் என்று பெற்றுக் கொள்ளுகிறேன்...! - . இப்படிக்கு, . தங்கள், பாக்கியவதி மல்லிகா.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/190&oldid=835502" இலிருந்து மீள்விக்கப்பட்டது