பக்கம்:பூ மணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 வரையப்பட்ட ஓவியம்போல ராஜேந்திரன் கண்ணிச் வழிய நின்ருன்; பூமா விம்மியழுதாள், குழந்தை வீரிட்டு அலறியது. மல்லிகாவின் மீது கனிந்த முதற்காதல், பிறகு பூங் குழவி தன் மீது கொண்ட தூய காதல், கடைசியில் இறுதி வெற்றி கண்ட பூமாவின் அன்புக்காதல்-இத்தகைய மூன்று காதல் பிறந்து வளர்ந்து, தூக்கமும் விழிப்பும் கண்ட நிலைக்கு ஈடுகொடுத்து நின்ற கடந்த சம்பவங்கள் ராஜேந்திரனின் கொதிக்கும் மூனேயில் மின் வெட்டித் தெறித்து விலகின.

  • மல்லிகா, அன்று உன்னேக் கைவிட்ட குற்றத்திற்கு மன்னிப்புப் பெற்று, பிராயச்சித்தம் தேடிக் கொள்ள எண்ணிய போதில், எனக்கு மற்ருெரு தண்டனையை அளித்துச் சென்று விட்டாயே?...இந்தத் தண்டனைக்குப் பரிகாரம் நான் எங்கு தேடுவேன்...மல்லி கா...??’

ராஜேந்திரன் தரையில் சரண்புகுந்தான்; மண் டையை விட்டு ரத்த வெள்ளம் புறப்பட்டது; அவன் புலம் பின அழுகை, கட்டிடம் முழுவதையும் அதிரச் செய்தது. '... காதல் பிறப்பதென்னவோ பூந்தென்றலில்தான்; ஆணுல் அதனே அடையும் வழியோ புயலும் குருவளியும் வீசிச் சுழலும் பயங்கரப்பாதை; எரிமலையும், பூகம்பமும் வெடித்தெழும் பயங்கரப் பூமி. அந்தப் புயல், குருவளி , பூகம்பம், எரிமலை எல்லாம் என்ருே ஒருநாள் அமைதி காணுகையில், தென்றல் படருகையில், அன்று பிறந்த காதல் கடைசியில் கதையாகப் போய்விடுவதுதான் மிகப் பயங்கரமானது...?? ராஜேந்திரனின் விரிந்த கண்களில் நீர்ப்படலம் விரிந் தது. அவன் பெருமூச்சு விட்டான். மல்லிகாவின் புகைப்படத்திற்குப் பூச்சூட்டிக் கொண் டிருந்தாள் பூமா. அவள் வதனத்தில் அருவி ஓடிக்கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/191&oldid=835503" இலிருந்து மீள்விக்கப்பட்டது