பக்கம்:பூ மணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பகல் வாசித்துக் கொடுத்த வரவேற்புரைக்கு நன்றி. கூறிக் கடமைப் பணியாற்ற புறப்பட்டது இரவு. இயற்கையின் மோனத் தவத்திற்குச் சுருதி கூட்டியது இளந்தென்றல். - ஆனந்தன் மன மிதித்ததும் மிதிக்காததுமாக முதன் முதலில் பி. ஏ. தேறிய தனக்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததை எண்ண எண்ண ராஜேந்திரனுக்கு ஆகா யத்தில் பறப்பதுபோலப் பட்டது. கடமை என்ற பண் பாட்டில்-ரத்தபாசத்தில் ஒ வ் .ெ வ | ரு காரியத்திலும் தன்னேக் கண்காணித்துவரும் தமையனின் தியாகப் பண்பைக் குறித்துப் புளகித்தான். தொடர்ந்து தன்பேரில் அன்பு மிக வைத்திருக்கும் அண்ணியைப்பற்றி எண்ணி ஞன். தன் பெயரை ராஜா வாக்கி மைத்துனன் உரிமை யில் பாசம் பங்குகொண்ன நீ என்று ஏக வசனத்தில் அழைக்கும் அவள் குரலில் அவன் ஒவ்வொரு முறையும் இன்பம் காணுவதையும் நினைத்துக் கொண்டான். அவனுக்கு உடலெங்கும் பெருமிதம் போர்த்தியது; சீதளம் சிந்திற்று. - அல்ே இன்றிக் கடல் உண்டா? அவன் நெஞ்சத்தில் பல்ப்பல நினைவுகள் பட்டம் விட்டன. அவற்றின் ஊடே நிழல் பின்னணியாக எழில் நடனம் பயின்ருள் சிறுமி மல்லிகா, பருவம் பெற்ற வாலேக் குமரியாக, - மல்லிகா! கற்பனைத் துரிகைகொண்டு இதயத் திரைவில் வரைந் திருந்த உயிரோவியம் அவள்; நெஞ்சத்தைத் தொட்டு நெஞ்சில் நிறைந்துவிட்ட அழகுராணி அவள்; பதம் பாடும் பார்வை; பண்பாடும் இதழ்கள்; நிலவு செய்யும் முகம்மறக்கக் கூடியவளா மல்லிகா அவளின் நினைவு முகத்தை ஆசை முகமாக்கி ஆராதித்து வருபவன் அவன். தி . . . . - உணவுக்கு அழைப்பு ஏந்திவந்த அண்ணியைக் கண் டதும், ராஜேந்திரன் எழுந்தான். இன்றைக்கும் அண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/30&oldid=835532" இலிருந்து மீள்விக்கப்பட்டது