பக்கம்:பூ மணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 எங்கே அண்ணிமூலம் தன் திருமணத்துக்குத் தூதுவிட்டி ருக்கப் போகிருரோ என்ற பயம் அவனுக்கு உள்ளுற மிதப் புக் காட்டியது. - உண்டு முடிந்து தன் அறைக்குத் திரும்பும்போது கூடத்தில் அழகிய ஜாக்கெட்டுடன் கூடிய புத்தகம் அவன் பார்வையில் பட்டது. இதழ்கள் புரண்டன; எண் னங்கள் புரண்டன. அவை ஒவ்வொன்றிலும் அப்பொழுது அவன் மல்லிகாவைத்தான் கண்டான். புத்தகத்திலிருந்த கதையொன்றைப் படிக்க எண்ணம் ஒடியது அவனுக்கு; படித்தான். ஏறக்குறையத் தன் நிலேயைக் கொண்டு-தன் உள்ளத்தின் போக்கை எதிரொலிப்பதுபோலச் சித்திரிக்கப் பட்டிருந்தது கதை. கதை அவனைச் சிந்திக்க வைத்தது. ...பிள்ளைப் பிராயத்திலிருந்தே அவர்கள் இருவரும் பழகினவர்கள், பாலுவுக்குச் சங்கரி என்ருல் உயிர்; அது மாதிரி சங்கரிக்குப் பாலுவிடத்து வாஞ்சை. ஒரு நாள் இரு வரும் பிரிய நேரிடுகிறது. ஆண்டுகள் சில இடைவெளி விட்ட பிறகு, ஒரு நாள் மீண்டும் சந்திக்கின்றனர். சங்கரி யின் நினைவிலேயே காதல் கொண்டிருந்த பாலுவை அவள் பதிலுக்குக் காதலிக்கவில்லே என்பதை உணர வாய்ப்பு ஏற்பட்டது. மனமுடைந்து போகிருன் கதா நாயகன். கதையின் முடிவு ராஜேந்திரனை திகைக்க வைத்தது. அவன் நினைவோட்டம் எங்கோ காலப்பில் ஓடியது. அவன் கண்களில் முத்துக்கள் சில உருவாகிக் கிடந்தன. சங்கரியை மல்லிகாவிற்கு ஒப்பிட்டானே......? தவழ்ந்த புத்தகத்தைத் தட்டியெறிந்து, பூங்குழலியிட மிருந்து பெற்று வந்த ஆங்கிலப் புத்தகம் ஒன்றைப் பிரித் தான். புத்தகத்தின் நடுவில் வைத்திருந்த கடிதமொன் றைப் பிரித்தான். அவன் தலே உருட்டிவிட்ட கோலிக் குண்டாகச் சுற்ற ஆரம்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/31&oldid=835534" இலிருந்து மீள்விக்கப்பட்டது