பக்கம்:பூ மணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'டாக்டர் அத்தான், என் உள்ளத்தில் ஏற்கனவே ஒருவர் குல தெய்வமாக இடம் பெற்றுவிட்டார். என்வரை என் காதலுக்கு நான் தினமும் பாதபூஜை செய்து வருபவள். இது என் இயல்பு-மனம். அந்த என் காதலர் ராஜேந்திரன், பெண் உள்ளத்தில் ஒருவருக்குத்தானே இடமுண்டு. என்னே மறந்து விடுங்கள்; மன்னியுங்கள், -பூங்குழலி’’ ஏதோ ஒர் உணர்ச்சியும், ஏதோ ஒரு வெறியும் பிடரி பிடித்துத் தள்ள நாற்காலியில் வந்தமர்ந்த ராஜேந்திரன் வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்தான். நடுங்கும் விரல் இடுக்கில் பதுங்கியவாறு இருந்த பேணு திருமதி பூங்குழலி அவர்கட்கு’ என்று ஒடி நின்ற தருணம், கைப்பேன கை நழுவியது. குனிந்து எடுக்கப் போனன். அது சமயம், சற்றுமுன் படித்த கதைப் புத்தகத்துடன் ஒட்டிக்கிடந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்வையிட்டான். மல்லிகா காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள், பூவிழி பேச, முத்துப்பல் ஒளி சிந்த: . ராஜேந்திரன் உலகத்தின் பாதத்தில் நின்று சுழன்று கொண்டிருந்தான்; உலகம் ராஜேந்திரனின் பாதத்தில் நின்று சுழன்று கொண்டிருந்தது! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/32&oldid=835535" இலிருந்து மீள்விக்கப்பட்டது