பக்கம்:பூ மணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அவள் அறிவாளா? ஆல்ை...... அந்தத் துருவம்-மையம்-விளிம்பு...! அண்ணி சொல்லி முடித்த யாரோ ஒரு பெண்ணின் புள்ளி விவரங்கள்பற்றி ராஜேந்திரன் அக்கரைப்படவில்லை; ஆதுரப்படவில்லை. அவன் உள்ளம், சூழ்நிலை அப்படி அமைக்கப்பட்டிருந்தது. காலத்தின் தேய்வில் கைகோர்த்தோடின நிமிஷங் களும், விடிைகளும். ஆல்ை அந்த ஒவ்வொரு விடிையும், ஒவ்வொரு நிமிஷமும் அவன் நெஞ்சத்திலே நீக்கமற நிறைந்திருந்தவள் மல்லிகா ஒருத்தியே! இந்நிலையில் மங்களம் அறிவித்த யாரோ ஒரு பெண்ணேப் பற்றிய சிந்தனை அவனுக்கு எப்படி மூளேயில் இடம் பெற முடியும்? உதிர்த்த கேள்விக்கு உதிரும் அவன் பதில் வேண்டிக் காத்திருந்த மங்களத்தின் பார்வை முழுதும் ராஜேந்திரன் பேரில் மொய்த்து விட்டிருந்தது. அவன் முகம் அப்பொழுது மாறிக் காண்பித்தது. பொறிதட்டும் நேரம் வசமிழந்தான் அவன் . பொறி தட்டும் நேரம் தன்னுணர்வு பெற்ருன் அவன். தந்திரம் கதிர் விரிந்தது; வெட்கம் விலகியது. தைரியம் துணை சேர்ந்தது. வார்த்தைகள் உருப்பெற்றன; கருநில மாறியது. சொல்லடுக்குப் பிறந்தது. ஆரம்பமும் முடிவும் தத்துப் பித்?தென்று அமையவில்லே. அவன் நெஞ்சில் நிறைவு இடங்கண்டது. -

  • அண்ணி, உங்களிடம் வாங்கிப் போனேனல்லவா அந்தப் புத்தகத்தில் ஒரு போட்டோ இருந்ததே, அந்தப் பெண்ணே உங்களுக்குத் தெரியுமா??? .

-- மங்களம் இதழ் பிரித்துப் புன்னகையைப் பிரித்து விட்டவளாக, ராஜா, உனக்கு மல்லிகாவைத் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/34&oldid=835538" இலிருந்து மீள்விக்கப்பட்டது