பக்கம்:பூ மணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30

 புத்தகத்தில் திணித்து வைத்தேன். நீதான் கதைப் பிரியகுயிற்றே. என் யுக்தி பலித்தது...?? என்று நிறுத்தினாள் மங்களம்.

ராஜேந்திரன் கண்கள் கண்டறியாதன கண்டன; காதுகள் கேட்டறியாதன கேட்டன. அவன் திகைப்பு அடங்கக் கொஞ்சம் நாழிகை ஆகத்தான் ஆனது.

அண்ணி, நீங்கள் அன்பு செய்வதில்தான் ஈடு இனை இல்லாதவர்கள் என்றிருந்தேன் இவ்வளவு நாளாக, மனோ தத்துவத்தில் கூடக் கைதேர்ந்தவர்கள் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன்.

அவன் பேச்சிலே ஆனந்தவெள்ளம் உணர்ச்சிச் சுழிப்பில் பெருக்கெடுத்தோடியது.

அதே சமயம் முன் படித்த பாலு-சங்கரி இருவரின் மனமாற்றம் பற்றிய கதை ராஜேந்திரனுக்கு நினேவில் மிதந்து வந்தது.

'அண்ணி, மல்லிகாவுக்கு என் மீது ஆசை...?? என்று மென்று விழுங்கினன் அவன். உடனே அவனுக்கு எங்கே யென்று வெட்கம் வந்துவிட்டது. அவன் விழித்தான். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டு அப்புறம் கேட்ட கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதோ என்று எண்ணித் திணறும் விதரணை தெரியாத குழந்தை போல.

'நன்ருயிருக்கிறது நீ கேட்பது. மல்லிகா தானே இந்த ஏற்பாடெல்லாம் செய்யத் தூண்டியவள். உன்னை உள்ளத்தில் எண்ணியல்லவா இதுவரை அவள் காத்திருக்கிருள்: இப்போதே அவளுக்கு எக்ஸ்பிரஸ் லெட்டர் போட வேணும்?’ என்றாள் மங்களம்.

பதுமைபாக நின்ற ராஜேந்திரன் தன் கனவுப் பதுமையான மல்லிகாவின் இன்ப நினைவில் தன்னேயும் மறந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/36&oldid=968923" இலிருந்து மீள்விக்கப்பட்டது