பக்கம்:பூ மணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•o. | 'திருமதி பூங்குழலி அவர்கட்கு.? அவனது பேகுப் பிடித்த கை இந்த ஒரு வரிக்கு மேல் தொடர்ந்து எழுத மறுத்தது. இரவு, பகல் என்று சென்ற மூன்று நாட்களாக அவன் பூங்குழலிக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தான். ஆரம்பம் முடிவு நியதியை எட்டவில்லை. ஆரம்பம் ஆரம்பமாகவே நின்றுவிட்டது. பலமுறை எழுதினன். பலமுறை கிழித்து வீசினன். முதலில் எழுதிய அந்த திருமதி பூங்குழலி அவர்கட்கு’ என்ற ஒரு வரிக்கு மேல் அவளுல் என்ன எழுதுவதென்று சிந்திக்கத் தெம்பு ஊறவில்லே, செய்தி பிறக்கவில்லே. ததையைக் குனிந்து பார்த்தான் அவன் துண்டுக் காகிதங்கள் குப்பை சேர்ந்தன. சிகரெட் துண்டுகள், நெருப்புக் குச்சிகள், கங்குலேப் பிரிந்து உதிர்ந்த சாம்பல் கூட்டங்கள் இவை அவனது சிந்தனையை, அவன் தயக் கத்தை அவன் தடுமாற்றத்தை எடுத்துக்காட்டின. சுழன்ற உலகம் நின்றும் கூட அவனுல் மேலே இயங்க முடியவில்ல்ே. பார்வையில் பட்டுக்கிடந்த அந்தக் கடிதம்-பூங்குழலி அவள் அத்தான் டாக்டர் குணசீலனுக்கு எழுதிவைத் திருந்த அந்தக் கடிதம் ராஜேந்திரனே வெட்டி இழுத்தது. அக்கடிதத்தின் முன் அவன் கண்கள் சுழன்றன; நீரைச் சிந்தின. . பூங்குழலியின் உருவத்தைத் தன் அகக் கண்ணில் பிரித்து வைத்துப் பார்த்தான். அவன் நெஞ்சு வரம்பை மனச்சாட்சி வளைத்து முத்தமிட்டது. மாலே மயங்கி வந்தது. அவன் மயக்கம் தீரவில்லே. பூங்குழலியுடன் நடந்த முதற் சந்திப்பை ராஜேந்திரன் எண்ண்ணிஞன்; சந்திப்பு, நட்புக்கனிய ஏதுவான சந்தர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/37&oldid=835543" இலிருந்து மீள்விக்கப்பட்டது