பக்கம்:பூ மணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பங்களேப்பற்றி எண்ணினன். நட்பு வளம்பெற வாய்ந்த விந்தையை எண்ணினன். 'உங்கள், நீங்கள் என்று சொல்லித் தயவு பண்ணி இனியும் என்னத் திணற அடிக்காதீர்கள்...? அன்று பூங்குழலி, ராஜேந்திரனிடம் கோரிய வார்த்தைகள் நினேவுக்கு வந்தன. அன்று விருந்து முடிந்ததும் அவள் தன்னைப் பிடித்துவிடுபவள் போன்று கிட்ட வரும்போது, தான் எட்ட நின்றதையும் மறக்க வில்லை. கல்லூரி விழா, நாடகம், பிக்னிக், விருந்து, டென்னிஸ் ஆட்டப் பந்தயம்-இத்தகைய நினைவுக் காட்சிகளே அவனுல் எப்படி நினேவைவிட்டுப் பிடித்துத் தள்ள முடியும் இம்மாதிரிச் சம்பவங்கள் நிகழ்வதே அபூர்வம். அபூர்வமாக நிகழ்ந்த சம்பவங்களே அவன் எவ் விதம் மறப்பான்? ஆனல் பூங்குழலியின் அந்தரங்கம்... ராஜேந்திரனின் அந்தரங்கம் அந்தரங்கத்தைத் தழுவாத துருவங்களாக்கி ஏதோ ஒர் புள்ளி மையத்தில் அந்தரங்கமாகச் சுழலும் மல்லிகா...! கண்களில் வேலி கட்டியிருந்த நீர்த்துளிகளே விரல் நுனியில் கீறிக் கழித்துவிட்டு மறுபடியும் பேணுவும் கையு மாக ராஜேந்திரன் எழுத ஆரம்பித்தான். கடிதம் பேசுகிறது! திருமதி பூங்குழலி அவர்களுக்கு, காதல் ஓர் எழிற்கனவு. இந்த என் கனவின் பிரதிநிதி மல்லிகா. அவள்மீது நான் கொண்ட முதற் காதல்? அது. அதுவே என் உள்ளம்-அந்தரங்கம்-ஆசை எல்லாம். இதுவே என் போக்கு-இயல்பு-கனவு: நட்பு ஒரு சுந்தர நினைவு. அந்த நினைவின் அடித் தளம் நீங்கள். நம் முதற் சந்திப்பில் உங்கள் மீது நான் கொண்ட முதல் நட்பு அது. நீங்கள் என் சிநேகிதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/38&oldid=835545" இலிருந்து மீள்விக்கப்பட்டது