பக்கம்:பூ மணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானகு: அடிவானத்திற்கப்பால்...! 2பிசி விழுந்தால் ஒலி எழும்பும். அவ்வளவு அமைதி. மிகவும் கவலைக்கிடமானதொரு ஆபரேஷன். டாக்டரும் தச்சும் சிந்தனே ஆப்பிய முகத்துடன் உட்கார்ந்திருக் கிமூர்கள். சிகிச்சை மேஜையில் தொட்டும் தொடாமலும் உறவுகூடி ஆயுதங்கள் சில சிதறிக் கிடக்கின்றன. இறந்த நேற்றைய தினத்தையும் பிறக்காத நாளேய தினத்தையும் பாலமிட்டுப் பயம் சுழித்தோடும் மனத்துடன் நோயாளி உயிர்க்கவிற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கிருன். இத்தகையதொரு * ஆபரேஷன் தியேட்டரின் அவலச் சூழ்நில அப்பொழுது அங்கே நிலவியிருந்தது. சிந்தனைபற்றிய டாக்டரும் நர்சும்போல டாக்டர் குண சீலனும் பூங்குழலியும் இருந்தார்கள். நோயாளிபோல தாஜேந்திரன் தத்தளித்துக் கொண்டிருந்தான். நடக்க விருக்கும் இன்ப, துன்ப முடிவை நிர்ணயிக்கச் சக்தி யற்று-அந்த நிர்ணயம் பற்றிய கவலேயே இல்லாததாகக் கிடக்கும் ஆயுதங்களைப்போல வணக்கம் என்ற சொல் மட்டும் அப்பொழுது அவ்விடத்தில் ஒலி எழுப்பி ஓசை அடங்கிப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/40&oldid=835550" இலிருந்து மீள்விக்கப்பட்டது