பக்கம்:பூ மணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 குணசீலனும் பூங்குழலியும் காரிலிருந்து இறங்கி ராஜேந்திரனுக்கு ஒன்றுசேர வணக்கம் தெரிவித்தார் களல்லவா? அதற்குப் பதில் வணக்கம் சொல்ல அவர்களே வரவேற்க அப்பொழுதுதான் ராஜேந்திரனுக்கு உணர்வு வந்தது. ராஜேந்திரன் வணக்கம் தெரிவித்தான். மலர் முகத் துடன் அவர்களிருவரையும் 'வாருங்கள்’ என்று வர வேற்ருன். ஆணுலும் அவன் இதயத்தின் உள்முனேயில் மட்டும் நடக்காதது நடந்துவிட்ட மாதிரி அவன் நடுங்கினன். எதிர்பாராதது சம்பவித்து விட்டாற்போல அவன் அச்சமடைந்தான். அழகைத் தாங்கி நின்ற அவன் முகம் நடுக்கத்தையும் அ ச் ச த் ைத யு ம் அடக்கிக் காட்டியது. -

  • ராஜேந்திரன், ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? உடல் நலமில்லையா? டாக்டரிடம் போய்க் காண்பிப்பது தானே???

'உடம்புக்கு ஒன்றுமில்லே, பூங்குழலி. அப்படி ஏதாவது என்ருல் உங்கள் தயவில் உங்கள் அத்தான் டாக்டர் குணசீலர்தான் இருக்கிருரே...?? டாக்டர் குணசீலனே நிமிர்ந்து பார்த்தான் ராஜேந் திரன். அப்பொழுது அவன் சொன்ன மொழிகளின் உள்ளம், டாக்டரின் முகத்தில் பிரதிபலித்திருந்ததை அவளுல் நன்கு உணர முடிந்தது. தயவென்ன நண்பரே, அன்புப் பரிவர்த்தனேக்கு முதல் மதிப்புக் கொடுப்பவன் நான். அதை விரும்புபவன்; எதிர்பார்ப்பவனுங்கூட’’ மகிழ்ச்சி. ஏறக்குறைய இப்போதைய உங்கள் எண்ணங்களுக்கு என் இதயமும் இணை சேர்ந்து சேகரம் பெறமுடியும். பூங்குழலியின் முன்பாக நம்மிருவரின் அறி முகம் ஏற்பட்டிருப்பதைப்பற்றி நான் ரொம்பவும் பெருமைப் படுகிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/41&oldid=835552" இலிருந்து மீள்விக்கப்பட்டது