பக்கம்:பூ மணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூமா, எங்கே இ ப் ப டி வந்தாய் ? என்ன விசேஷம்... ??? அத்தான், அவசரமாகப் புறப்பட்டீர்களா? தயவு பண்ணி என் அவசரக் காரியத்தையும் கவனிப்பீர்களா ? எனக்காகச் சற்று தாமதிக்க முடியுமா? கார் போகட்டும், அத்தான்...’’ என்று பூமா அழுகை பாதியும் ஆத்திரம் பாதியுமாகச் சொல்லி நிறுத்தினுள். - சில வி ைடி க ள் மெளனத்தின் அரவணைப்புக்கு உடந்தையானபின், பூமா 'அத்தான், என் அப்பாவுக்குச் சென்ற இரண்டு வாரமாகத் தாளாத வயிற்று நோவு. திருச்சியில் வைத்தியம் பார்த்தோம் ; பார்த்த டாக்டர் களெல்லாம் கைவிட்டு விட்டார்கள். கடைசியில் பெரிய டாக்டர் தனக்கு வேண்டிய டாக்டர் குணசீலன் என்ற பட்டணத்து டாக்டருக்குத் தபால் தந்திருக்கிருர். என் அப்பாவைக் காப்பாற்றுங்கள், அத்தான். பழைய பிளவை, பூசலேயெல்லாம் மறந்து எங்களே மன்னித்து விடுங்கள் அத்தான்...’’ என்று மீளவும் விம்மினுள். வார்த்தை விடாமல் கேட்டுக் கொண்டே வந்த ராஜேந்திரனுக்குக் கண்ணுேரங்களில் கண்மணிகள் துளி சேர்ந்து வந்தன. கடைசியில் பூமா சொன்ன டாக்டர் குணசீலன்’ என்ற பெயர் அவனுக்கு விழிப்பைத் தந்தது. கார் நின்ற பக்கம் திரும்பிச் சென்று, டாக்டர் குண சீலன், இந்தப் பெண்ணின் தகப்பனுருக்கு வயிற்று வவி யாம் ; அவர் என் மாமா தான். அந்த நோயைக் குணப் படுத்துவதில் ஸ்பெஷலிஸ்டு எனக் கேள்விப்பட்டிருக் றேன். யாரோ உங்கள் டாக்டர் நண்பரும் திருச்சி யிலிருந்து கடிதம் கொடுத்திருக்கிருராம்...டாக்டர், தயவு பண்ணி வந்து பாருங்கள்...ஒரு நொடியில் திரும்பிவிடலாம் ...நான் பூங்குழலியிடம் சொல்லுகிறேன்...?? என்று பதட்டம் சிதறிய குரலில் மளமளவென்று சொல்லி முடித் தான் ராஜேந்திரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/44&oldid=835558" இலிருந்து மீள்விக்கப்பட்டது