பக்கம்:பூ மணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 'பூமா, வா உள்ளே...?? மாற்றங்காட்டிய முகத்தை மாற்றியமைத்து, அத் துடன் கொஞ்சம் சிரிப்பையும் துணை சேர்த்துக் கொண் டான் ; அவன் முகம் அப்போது கொஞ்சம் மலர்ந்திருந்தது எனினும், பூங்குழலியின் காரணமற்ற மாற்றத்தை அவன் மறக்க எத்தனம் பண்ணியும் முடியாதிருந்தது. தாமரை இலை மீது பதிந்த நீர்த்திவலைகளேப் போல அந்நிகழ்ச்சி அவன் மனத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. ஆனல் கணத்தில் தோன்றிக் கணத்தில் மறையும் நீர்க் குமிழி போல இந்த மனமும் கடந்துபோன நிகழ்ச்சிகளையும் கை கழுவி விட்டால்...! அப்படிப்பட்டதொரு பக்குவ நிலைக்கு இந்த மனம் எங்கே ஒரு மனப்படுகிறது...! உதய கன்னியின் கடைசிப் புன்னகையும் பிறந்து மடிந்து விட்டது. - ராஜேந்திரனத் தொடர்ந்தாள் பூமா. அப்போதுதான் ஆபீஸ் முடிந்து திரும்பிய ஆனந்தன், பூமாவைக் கண்ட தும் அதிசயித்துப் போனன். ராஜேந்திரன் விளக்கம் கொடுத்தான். ஆனந்தனும், மங்களமும் பூமாவுக்கு ஆறுதல் சொன்னர்கள். விழி திறந்து மூடுவதற்குள் மங்களம் பூமாவுக்குக் காப்பி போட்டுக் கொடுத்தாள். பூமாவுக்குக் காப்பி குடிக்கக்கூட மனமில்ல; அவள் பேதை நெஞ்சம் பெருமூச்சை நெட்டித் தள்ளியவாறிருந்தது. புகை மண்டிய ஓவியம் போலிருந் தாள் அவள். அவள் நெஞ்சத்தில் புகையும் நெருப்பும் சேர்ந்து குமைந்த வண்ணமிருந்தன. சிறு குழந்தை போலச் செருமுகிருயே.....காப்பி யைக் குடி, பூமா.’’ - - 3. * ...." 、"" 。 அத்தான் ராஜேந்திரன் சொன்னதும் அவள் அருந் மங்களம் அவளே உள்ளே அழைத்துச் சென்ருள். பூமா ம் சமயம், புகை நீங்கித் துப்புரவு செய்யப்பட்ட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/46&oldid=835562" இலிருந்து மீள்விக்கப்பட்டது