பக்கம்:பூ மணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நான் வியர்க்க விறுவிறுக்க நிற்பேன். சுயநினைவு வந்து உங்களைப் பார்த்தால் நீங்கள் இருக்கமாட்டீர்கள். நான் அழாத குறையாக ஏங்கிப் போவேன். சாவோடு போராடிக்கொண்டிருக்கும் அப்பாவிடம் செல்லுவேன். இன்னும் என் துயரம் இரட்டிப்படையும். இன்று அப்பா என்னே அழைத்தார். என் முகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அவர், பூமா, உன் அத்தான் ராஜாவை உனக்குப் பிடிக்கிறதல்லவா? ரொம்ப தல்லவன். நம் உறவு முறைப்படி பார்த்தால் நீதான் அவ ஒக்கு வாழ்க்கைப்படவேண்டியவள். அவனும் உன்னேயே மனேவியாக்கிக்கொள்ள வேண்டியவனுங்கூட. உனக்குச் சம்மதம்தானே...??? என்ருர். பேசி வரும்போதே அவர் கண்கள் நீரைக் கொட்டின. நான் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகம் அப்பொழுது ஆனந்தமான இன்பக்கனவு ஒன்றைத் தீட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. உடல் நலிவும், ஆற்ருமையும் தீரச் சில விகுடிகள் ஒய்வு கொண்டபின் அப்பா சொன்னுர்: பூமா, என் கண்கள் உன்னே கணக்கோலத்தில் காணத் துடிக்கின்றன, ராஜாவிடம் சொல். முடிவைக் கேள். நான் அதிக நாள் பிழைத்திருக்கமாட்டேன்......”* அப்பா தேம்பினர்; நான் தேம்பிக் கொண்டிருக் கிறேன். அத்தான், உங்கள் பூமாவை நீங்கள் இவ்வளவு நாளாக மறந்துதானே விட்டீர்கள்? மணல் வீடு கட்டி, சொக்கட்டான் ஆடி, நிலா விளையாட்டு விளையாடினுேமே, அந்த நம் கனவுலக நாட்களேயும் சேர்த்துத்தானே மறந்து விட்டீர்கள்? நீங்கள் கள்ளத்தனமாக என்னிடம் ஓடிவந்து கள்ளத்தனமாகப் பேச வருவீர்களே, அப்போது கள்ளச் சிசிப்பொன்றை மட்டும் நழுவவிட்டுச் சென்று விடுவேனே, அந்தப் போதை நினைவையுங்கூடவா மறந்து விட்டீர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/54&oldid=835580" இலிருந்து மீள்விக்கப்பட்டது