பக்கம்:பூ மணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

스) அத்தான்? ஆனால் அவையெல்லாம் சேர்ந்துதானே உங்கள் உருவில் நின்று அன்று தொட்டு இன்றுவரை என்னே உங்கள் பூமாவாக நிலைத்து நிற்கச் செய்திருக் கின்றன: அவற்றை நான் எவ்விதம் மறப்பேன்? உங்கள் கள்ள விழிப்பார்வையை, கன்னல் மொழிப் பேச்சை, மனங்கவரும் உருவை, மாண்டி கொண்ட உள்ளத்தை நான் மறக்கவேமுடியாது. நான் பாக்கியசாலி;. என்றென்றும் நான் பாக்கியசாலியாக அமையச் செய்யுங் கள். இனி என் வாழ்வு உங்கள் கையில்; என் வளம் உங்கள் கண்காப்பில்; என் எதிர்காலம் உங்கள் திட்டத் தில்; என் உயிர் உங்கள் உடலில். அத்தான்......இனி பூமிா உங்களவள்....உங்கள் பூமா...! -பூமா.’’ கடிதம் முதல் நாளில் வந்தது. முன் நாளும் மறைந்து பின் நாளும் பிறந்தது. காலத்தின் சுழற்சியில் அதற்குள் எத்தனையோ வினுடிகள் க:ளிகரமாகின. ஒவ்வொரு விடிையும் ராஜேந்திரன் செத்துப் பிழைத் துக் கொண்டிருந்தான். அவன் இதயம் ஒவ்வொரு தரமும் மாண்டு மறுபிறவி எடுத்துக்கொண்டிருந்தது. இத்தகைய அவன் நிலக்கு அவன் கைக்குள் அடங்கிக்கிடந்த பூவை வின் கடிதமே காரணம். மனச்சாட்சி முன் அவன் தன். வாக்குமூலத்தை-தன் கோரிக்கையை-தன் இதயத்தின் இதயத்தைப் பிளந்து காட்டிக்கொண்டிருந்தான். அவன் இதயம் பேசிக்கொண்டிருந்தது. இதயத்தின் ஒவ்வொரு நரம்பின் ரத்தக் குழாயின் தேக்கத்திலும் அந்த வார்த்தை. கள் எதிரொலித்தவாறிருந்தன. இமைக் கதவுகளின் நிலைப்படியில் உதிர்ந்து நின்ற முத்தாரத்தை வழித்து விசிறிவிட்டு ராஜேந்திரன் தலையை எம்பிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/55&oldid=835581" இலிருந்து மீள்விக்கப்பட்டது