பக்கம்:பூ மணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

お

அப்படி அருமை பெருமையாக வாய்த்த இந்த நேரத்தில் மல்லிகாவின் வீணு கானத்தை ரசிக்கக்கூட முடியவில்லை. அதற்குக் காரணம் பூமாவின் அக்கடிதம். கடந்த நிகழ்ச் சிக்கு-தன் மெளனத்துக்கு மல்லிகாவிடம் மன்னிப்பு வேண்ட தினத்தான். 'மல்லிகா, அன்று உன் வீனகானத்தை முழுதும் கேட்க முடியவில்லே. இன்று. தயைசெய்து ஒரு பாட்டை வினேயில் இசைத்துக் காட்ட மாட்டாயா...?’’ அவள் மறுமொழி பேசவில்லே. ஆனல் அவள் கண் மலர்கள் பூவிரிந்து 'ஆஹா என்று இணக்கங்காட்டின. வீணேயுடன் அவள் அமர்ந்தாள். செங்கரத்தின் விரல்கள் தந்திக்கம்பிகள்மீது உலவும் பூந்தென்றலாக இழைந்தன. நாணம் பிறந்தது. சிந்தை பறிகொடுத் தான் அவன். அவன் கண்கள் அவள் கண்களுடன் ஐக்கியப்பட் டிருந்தன. அவன் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந் தான். ஆமாம்; காதலில் தத்தளிப்பவன் கன வில் வாழ்வ தாகக் கூறுகிருர்களே! மல்லிகr, கானம் முழங்கு...உன் கை விரல்கள் கடுக்கும்வரை நிறுத்தாதே...உன் வீணே நாதம் என்னேப் பித்தனுக்குகிறது. தந்தியில் எழும் நாதம் என் சிந்தையில் காதல்கனலேக் கக்குகிறது. நான் அமைதி வேண்டுகிறேன். பாடு.பண்பாடு. வீணே நரம்புகளே மீட்டி அவற்றுக்கு உயிர் கொடு...மல்லிகா...?? என்று உரக்கக் கூவிஞன் ராஜேந்திரன். - மறுகணம் அவனுக்கு நல்ல ஞாபகம் வந்தபோது தரையில் விழுந்து கிடப்பதை உணரவே, வெட்கப்பட்டு எழுந்து திண்ணேக்குப் போனன். அவன்மீது அந்தியின் கதிர்கள் பட்டொளி பர்ப்பிக்கிடந்தன. சற்றுமுன் அவன் இன்பலோகத்தில் பவனி வந்தபோது உள்ளத்தில் ஊறி நின்ற இன்ப மோதலும், ஆனந்தப் பூரிப்பும் அவனுக்கு மாருத இதயத்தையும், எண்ணத்தையும் பரிமாறித் தந்திருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/57&oldid=835585" இலிருந்து மீள்விக்கப்பட்டது