பக்கம்:பூ மணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ராஜா என்று அழைத்து, அழைப்பின் காரணத். துக்கு விடைகூறும் விதத்தில் ஏந்திய காப்பியுடன் உள்ளே துழைந்தாள் மங்களம். ‘ராஜா, மணிக்கு நூறு தடவை அண்ணி அண்ணி? என்று உயிரைப் போக்குவாயே! நேற்றும் இன்றும் உன் குரலேயே கேட்கவில்லையே! ஒ.....புரிகிறது......மல்லிகா வந்திருப்பதாலா?......சரி......மல்லிகாவின் அ ப் ப ைவ ஹைதராபாத் பக்கத்திலிருந்து மதுரைக்கு மாற்றிவிட்டார் களாம். அதுவும் நல்லது தான். அவள் நாளேக்கு ஊருக்குப் போகவேண்டுமாம். அ வ ர் க ள், கல்யாணத்திற்கான ஆரம்ப ஏற்பாடுகளெல்லாம் கூடத் துவங்கிவிட்டார்களாம். நாம்தான் இனி அவசரப்படப் போகிருேம். ராஜா, உன் திருமணத்துக்கான சகல பொறுப்பையும் நானும் உன் அண்ணுவும் கவனித்துக்கொள்கிருேம் ; நீ மணவறையில் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்தமரமட்டும் மறந்து விடாதே. ஏனென் ருல், மல்லிகா மாயக்காரி. அவள் நினைவு உன்னே மறக்கச் செய்து விடும். என்று பாடம் ஒப்புவிப்பதைப் போலச் சொல்லி நிறுத்திய மங்களம் விஷமமாகச் சிரிக் தாள். அப்பொழுது அருவிச் சிரிப்பொன்றின் மெல்லிய பண் அவன் காதுகளில் விழுந்தது. அது மல்லிகாவினுடை பதே என்பதை ராஜேந்திரன் அறிந்திருந்தான். .” போங்கள் அண்ணி, மைத்துனன் என்ற முறையில் நீங்கள் என் சீனக் கேலி பண்ணினுலும், அந்த மைத்துனன் முறைக்காகச் சி றி த ள வு மரியாதையும் தரத்தான் வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்: என்று எதிர் மொழி விடுத்துச் சிரித்தான் ராஜேந்திரன். மங்களமும் சேர்ந்து சிரித்தாள். - அவனது மலர் முகம் இமைப்பிற்குள் குவிந்துவிட்டது. தான் மல்லிகா மீது கொண்ட முதற் காதலே எண்ணி ன்ை, கல்லூரிச் சிநேகிதி பூங்குழலி தன்மீது கொண்ட காதலேயும், அந்தக் காதல் ஒரு வழியாக ஒழுங்குபடுத்தப் பட்ட செயலேயும் எண்ணினன். கடைசியில் அன்று வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/58&oldid=835587" இலிருந்து மீள்விக்கப்பட்டது