பக்கம்:பூ மணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பூமாவின் கடிதத்தையும் சேர்த்து எண்ணினன். ஆளுல் பூமாவிற்கு எப்படிச் சமாதானம் கூறுவதென்பது மட்டும் அவனுக்குப் புலப்படவில்லே. வழி பிறந்தும் அவளிடம் எவ்விதம் தன் முடிவைத் தெரிவிப்பதென்ற துணிவு பிறக்க வில்லை. கடைசியில் அவன் இதயத்தில் அந்த முடிவுதான் தலே காட்டி நின்றது. வழி தங்கி வழி கண்ட முடிவுஆரம்பமே முடிவாகிவிட்ட முடிவு அது...! புதிதாகத் திரையிடப்பட்டிருந்த சினிமாப் படமொன் றிற்கான விளம்பரக் காரொன்று வாத்தியங்கள் முழங்கப் போய்க்கொண்டிருந்தது, சற்று தொலைவில் ஒடிக்கொண் டிருந்த டிராமின் தேய்ந்த ஒலி அலேகளே வெளியேற்றிக் கொண்டிருந்தது. சுவர்க் கடிகாரத்தில் அப்பொழுது மணி ஐந்தடித்து ஒய்ந்தது. மறு ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் லோகல் லெட்டர்’ ஒன்று பூமாவிற்குப் பறந்தது. ராஜேந்திரன் கண்ணிர் மண்டிய விழி விரிப்பின் தடத்திலே அந்தக் கடிதம் கண்ணிச் சிந்திக் கொண் டிருந்தது. . 'அன்புள்ள பூமா, காலம் நம் இருவரையும் பிரித்துவிட்டது. நாம் பிரிய நேரிட்டு விட்டது. - - மல்லிகா என்ற பெண்ணே நான் மணம்செய்துகொள்ள ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. இந் நிலையில் உன் கடிதத்திற்கு நான் என்ன செய்யமுடியும்? மன்னித்துக்கொள். என் திருமணம் முடிந்ததும், உன்னை மணமகளாக்கும் முயற்சியில் ஈடுபட உறுதி கூறுகின்றேன். அதுவே எனக்கு ஆறுதல்- அதுவே என் கடமை. -ராஜேந்திரன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/59&oldid=835591" இலிருந்து மீள்விக்கப்பட்டது