பக்கம்:பூ மணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ராஜேந்திரா, காஸினேவில் நல்ல படமொன்று நடக்கிறதாம். இன்ருேடு கடைசி. நானும் மல்லிகாவும் போகிருேம். நீயும் வந்தால் எங்களுக்குத் துணையாக யிருக்கும்...?? என்ருள் மங்களம்; உதட்டுக் கரையில் கள்ளச் சிரிப்பு குமிழிட்டது. அவனுக்கும் மனம் என்னவோ போலிருந்தது. சினிமாப் பார்த்தால் மனத் தெளிவு உண்டாகுமென்றும் நினைத்தான். மல்லிகாவுடன் செல்வதில் அவனுக்குப் புது மாதிரியான இன்பமும் இருந்தது. டாக்ஸிக்கு ஏற்பாடு செய்தான். கார் தியேட்டரை அடைந்தது. இரண்டு டிக்கட்டுகளே வாங்கி மங்களத்தின் கையில் ஒன்றும், மல்லிகாவின் கையில் ஒன்றுமாக நீட்டினுன், பெண் பகுதிவரை சென்று வழிகாட்டிவிட்டுத் திரும்பிவந்து நாற்காலியில் உட்கார்ந்தான். படம் துவங்கியது. சர்வதேச பிலிம் திருவிழாப் படம் அது. பெயர் யூகிவாரிசு’. பல நாடுகளால் ஒரு முகமாகப் பாராட்டப் பெற்ற ஜப்பானியப்படம் அது. இடை வேளேக்கு விளக்குகள் போட்டார்கள். அதன் முதல் ஒளிக் கயிற்றில் மல்லிகாவின் சிரித்த முகம் கனடான்; அதே சமயம் பூமாவையும் கண்டான். ஆனல் அவள், கண்களில் தேக்கமிட்டிருந்த கண்ணிர் வெள்ளத்துடன் சோகப் பதுமையாகக் காணப்படுவாள் என்று ராஜேந்திரன் எவ் விதம் எதிர்பார்த்திருக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/60&oldid=835595" இலிருந்து மீள்விக்கப்பட்டது