பக்கம்:பூ மணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முறை என்று ஒன்று இருக்கிறதே! அன்று ராஜேந்: திரன் மல்லிகாவைப் பெண் பார்க்க மதுரைக்குப் போயிருந்: தான். அவனுடன் அவன் தமையன் ஆனந்தன், அவன் மனைவி மங்களம் இவர்களும் சென்றனர். பெண் வீட்டில் ராஜோபசாரம் நடந்தது. பெண்ணின் தந்தை ராஜேந்: திரனுடன் அளவளாவிப் பேசினர். தன் மனைவி இந்த கோலாகலக் காட்சியையெல்லாம் காணக் கொடுத்து வைக்கவில்லேயே’ என்று குறைப்பட்டுக் கொண்டார் அவர். தன் ஒரே மகளின் நன்மை ஒன்றையே கருதி மறுதாரம்கூடச் செய்துகொள்ளவில்லே அவர் என்றறிந்: ததும் ராஜேந்திரனுக்கு அவரிடம் தனித்த ஈடுபாடு. தேவலோகத்தினின்றும் அப்பொழுதுதான் இறங்கி வந்த மாயமோகினியைப் போலக் காணப்பட்டாள் மல்லிகா. நெஞ்சையள்ளும் காவியத்தை ரசிப்பவனைப் போல, அவள் எழிலே அவன் ரசித்தான்; பருகினன். அவள் அழகு ரோஜா; இன்ப மல்லிகை; அன்புச் செண்பகம்! பூத்த மலர் மணம் பரப்புவதில் வியப்பென்ன? திருமணம் நடப்பதற்குள் மல்லிகாவை ஒரு முறை நேருக்கு நேர் வைத்துப் பார்த்துப் பேசவேண்டும்; அவளே, அவள் மனதை அறிந்துகொள்ள வேண்டும்; அப் போதுதான் தன் போக்கிற்கு, மனதிற்கு அவளே அனு: சரணையாக்க வாய்ப்பு ஏற்படும். இருமனம் ஒன்ருளுல்தான் வாழ்க்கை வாழ்க்கையாக ரசனை பெறும்; ரசனை தரும். ரசஆனயை, ருசியை எதிர்பார்த்துத்தானே வாழ்க்கையை எதிர்நோக்குகிருேம்... . - இப்படிப்பட்ட தீர்மானம் அவன் நெஞ்சில் முனைந்: திருந்தது; சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தான். - அவனுக்கென ஒதுக்கிவிடப்பட்டிருந்த தனியறையில் உட்கார்ந்திருந்தான் அவன். இருள் பிரியும் வேளை. ஆலவாய்ப் பெருமாள் கோவில் மணி டேங் டங்கென்று ஜங்கார சுருதி கூட்டி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/62&oldid=835599" இலிருந்து மீள்விக்கப்பட்டது