பக்கம்:பூ மணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தனிமையை ஒரு சிலர் விரும்புகிருர்கள், ரசிக்கிருர்கள். பலருக்கு அது பயங்கரமாகத் தோன்றுகிறது. ராஜேக் திரனுக்கு தனிமை என்ருல் வெகு பிரியம். என்ருலும் அப்போதைய தனிமை அவனுக்கு வேம்பாக இருந்தது. எதற்குமே மனம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. அந்த மனம் இருந்தால்தான் வேம்பும் சொல்லாமலே அமிர்தமாகி விடும். ஆம்; மனம் கொண்டதுதானே மாளிகை...! அவன் தனிமையைப் போக்குபவள் போலக் கையில் பலகாரத் தட்டுடன் மாடிப்படிகளேக் கடந்து வந்தாள் மல்லிகா. அமுதமயமான வாய்ப்பு ஒன்று முன் விரிந்து நிற்பதை உணர்ந்தான் அவன். தேனில் விழுந்த ஈயைப்போல இருந்தது அவன் நிலே, ஏனே அவனுக்கு லஜ்ஜை மேலிட்டது. மல்லிகா அவன் முன் நின்ருள்; பொற்பதுமையை விழி பரப்பி ஏறிட்டுப் பார்த்து, இதழ் விரித்து மல்லிகா என்று குயில் குரல் கொடுத்தான் ராஜேந்திரன். இசைத்தட்டிலிருந்து பாட்டொன்று மிதந்து வந்து கொண்டிருந்தது. ஆசைக் கிளியே அழைத்து வாராய் தென்றலே-தென்றலே! இரு வரிகள் சிருங்காரப் பண் இசைத்தன. ஏக காலத்தில் இருவரும் திரும்பினர்கள். ஜோடி விழிகள் மோதின; விலகின. விளைவு, ஒரு காந்தச் சிரிப்பு; இன்பப் போதை; ஆசைக் கண்ணுேட்டம்: நல்லவேளே, இருவரும் திசை திரும்பிவிட்டார்கள். மேல்விகா : к к 笼3

  • * *१4 * ॐ ४ ॐ * * * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/63&oldid=835601" இலிருந்து மீள்விக்கப்பட்டது