பக்கம்:பூ மணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5

மல்லிகா, அன்று நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தபோது உன்னுடன் பேசவில்லே என்றுதானே என்மீது பிணக்காக இருக்கிருய். ஆளுல் நான் .ன் னுடன் பேசி விட்டேனே, அது உனக்குத் தெரியுமா...??? பேசினிர்களா, என்னுடளு?...?? ஆமாம்; கனவில்...?? கனவுt ஆம்; இன்றுதான் ஈடேறியிருக்கிறது...”* 'என் கனவும் இன்றுதான் ஈடேறியிருக்கிறது.?? இருவரும் கனவு கண்டவாறிருந்தார்கள். அப்பொழுது கீழே பேச்சொலி கிளம்பியது. மல்லிகா பட்டாம்பூச்சியாகப் பறந்தே போய்விட்டாள். பழைய நிகழ்ச்சிகள் அவன் மனத்தில் பூச்சரம் தொடுத்தன. - பெண் பார்த்தாயிற்று ; கல்யாணத்திற்கும் தேதி குறித்தாயிற்று. 'நாலு பேர் முன்னிலேயில் சமூகம் என்ற ஒன்றின் அங்கீகாரத்துடன் மல்லிகாவின் மலர்க்கரம் பற்றி இரு மனம் ஒன்று சேர் தம்பதிகளாக வேண்டியதுதான்; அப்புறம் வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கைதான்; வாழ்வே ஒரு இன்பச்சோல்ே; அன்பு ஊற்று; காதல்மயம். ஆஹா !” 姿 隶 琴 ராஜேந்திரனின் நினைவுக் கொடியில் இப்படி எண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின. கல்யாணத்திற்கு இன்னும் மூன்றே தினங்கள்தான் இருந்தன. அவனுக்கு நிற்கக்கூடப் போதில்லை. அவன் தமையன் ஆனந்தன் மதுரைக்குப் போயிருந்தான். அங்கு. பெண் வீட்டில் தான் திருமணம். மங்களம் பம்பரமாகச் சுற்றினுள். வேலை நெட்டி வாங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/64&oldid=835603" இலிருந்து மீள்விக்கப்பட்டது