பக்கம்:பூ மணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 'அண்ணு?? . . அழைக்கும்போதே ராஜேந்திரனுக்கு அழு ைக பீறிட்டுக் கொண்டு கிளம்பி வந்தது. இனம் விளங்க மாட்டாத திகிலும், புயலும் அவன் நெஞ்சத்தை ஆக்கிர மித்துக் கொண்டிருந்தன. புயலில் சிக்கிய சருகாக அவன் சுழன்று கொண்டிருந்தான்-காடுமேடெல்லாம் சுழற்றி யடிக்கப்படும் சருகைப்போல அல்ல ; நின்ற இடத்தையே மையமாக்கி, நின்ற நிலையையே மறந்துபோய், நின்ற நினேவையும் இழந்தவகை அவன் சுழன்று கொண்டிருந் தான். புயல்-அதில் தத்தளிக்கும் சருகு ! சருகின் நிலை புயலுக்கு எங்கே தெரியப் போகிறது ? ஆனால் புயலைப் பற்றிய முடிவும் சருகுக்கு எங்ங்ணம் தெரிந்திருக்கமுடியும் ? அப்படியென்ருல் இந்தப் புயலும் சருகும்......இவ்விரு வெவ்வேறு புள்ளிகளின் நிலே, கதி, முடிவு......! و او را 6r وی ۶ »

  • & .ל. ל

பதில் இல்லே. படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த ஆனந்தன், தன் நினைவற்றுப் படுத்துக் கிடந்தான். பக்கத்துத் தெரு டாக்டர் வரவழைக்கப்பட்டார் ; மருந்துகள் வந்தன. பணம் கைமாறியது. சிகிச்சை நடந்தது. 'கேஸ் அப்படிப் பிரமாதமானதாக இல்லே. ஏதோ அதிர்ச்சி அடைந்திருக்கிருர். அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஏதாகிலும் கேட்டிருக்கவேண்டும். அதுதான் இப்படிப்பட்ட மயக்கத்திற்குக் காரணம். கொஞ்ச நேரத்திற்குள் குண மாகிவிடும். ? - - டாக்டர் திரும்பினர். புயல் வீசிக்கொண்டிருந்தது ! கையெழுத்து மறையும் நேரம். கையால் கன்னத்தை ஏந்தியவாறு மங்களம், அவள் கணவன் அருகே அமர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/67&oldid=835609" இலிருந்து மீள்விக்கப்பட்டது