பக்கம்:பூ மணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 'பார்த்தேன்; அம்மன் ஆசைதிர விளையாடி விட்டாள். ஊசி குத்தக்கூட இடம் விட்டுவைக்கவில்லை. முழுதும் அம்மை வடுக்கள்தாம்...... あ 。 மனமொருமித்த ராஜேந்திரன்-மல்லிகா திருமணத்தை விழாப்போல நடத்திவைக்க மங்களம் எவ்வளவு கனவு கண்டாள்? ஆனந்தன் எவ்வளவு கனவு கண்டான் ? அப்படியென்ருல்......! அப்படியென்ருல் ராஜாவின் கல்யாணம்...... و و چ என்ருள் மங்களம். அண்ணி, எதற்கும் நான் போய் எப்படியும் மல்லி காவைப் பார்த்துத்தான் என் கல்யாணத்தைப்பற்றித் தீர்மானம் செய்யவேண்டும்?' என்று தன் அபிப்பிராயத் தைத் தெரிவித்தான் ராஜேந்திரன். ஆனந்தனுக்கும் அவன் மனைவிக்கும் இந்த யோசன சரி என்றே பட்டது. - . அடுத்த நாள் மதுரைக்குப் புறப்பட்டான் ராஜேந் திரன். வழியெல்லாம் மாளாத சிந்தனையில் மீளாமல் தவித்தது அவனது தளர்ந்த நெஞ்சம். - மல்லிகாவை முதன் முதலாகச் சந்தித்த அந்த நாள் ; நட்பு, காதலாக உருமாறிய அந்த நாள் ; காதல் கல்யா .ணத்திற்குக் கொணர்ந்த அந்த நாள்-இப்படி எல்லா நாட் காேயும், அந்த நாட்களுக்கெல்லாம் உயிர்ப்பாக நின்ற மல்லிகாவையும் எண்ணினுன் அவன். எண்ணமெல்லாம், கனவெல்லாம், மூச்செல்லாம் மல்லிகாவாக அழகுக்கோல மாகக் கோலாகலமாகக் காட்சிதந்த விந்தை நேரங்களே யும் எண்ணின்ை. ஒவ்வொரு விடிைக்கும், ஒவ்வொரு எண்ணத்துக்கும் அவன் இதயத்தின் பெருமூச்சும், உட லின் ரத்தக் கண்ணிரும்தான் கண்ட பலஞக முடிந்தன. ஒருகால் அதுவேதான் முடிவாக......* . புகைவண்டி மதுரை நிலையத்தை அடைந்தது. சாஜேந்திரனுக்குச் சிந்திக்கும் உணர்வே அற்றுப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/70&oldid=835616" இலிருந்து மீள்விக்கப்பட்டது