பக்கம்:பூ மணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 விட்டதோ என்றுகூடச் சந்தேகம் வந்தது. அப்படிக் கனத்திருந்தது தலே. ஆனால், அன்று மல்லிகாவைப் பெண்பார்க்க வந்த அவன் எத்தனை எத்தனே ஆசைக் கனவுக் கோட்டைகளைப் படைத்துவிட்டிருந்தான் அந்த ஆசைக் கனவுக் கோட்டைகள் என்றென்றும் நிலவி நிற்கும் இன்பக் கோட்டைகளாக அமையவேண்டுமே ! அமையுமா..? மூன்ரும் பேருக்குத் தெரியாவண்ணம் எப்படியோ மல்லிகாவை ராஜேந்திரன் பார்த்தான். பார்த்த அவனுக் குத் தன் கண்களேயே நம்பக்கூடவில்லே. 'மல்லிகாவா இது ? அழகுப் பாவையாக, அழகுக் குவியலாக, அழகே உருவாகக் கண்ட என் ஆசைக் கிளியா இது ? பார்க்கக்கூடக் கண் கூசுகிறதே பெண் ணுக்குப் பெண் இரக்கமிருக்கும் என்பார்களே !...... அந்த அம்மனுக்கு மல்லிகாமீது ஏன்தான் இத்தனே வஞ்ச னேயோ?...... இத்தகைய கோலத்திற்குத்தான் விதி என்று பெயரா? விதி என்றுதான் பெயரிட்டு அழைப்பதா ? அழைக்க வேண்டுமா ? விதி வாழ்க்கையின் விதியா இது ? அல்லது விதியின் விதியா இது ? விதியே, உனக்கு நெஞ்சமே கிடையாதா? என் மல்லிகாவை......என்ன ? உரிமை பாராட்டுதலா? அப்படியென்ருல் மல்லிகாவை மறந்து நான்......மறந்துவிட வேண்டியது தா.ை..... என்ன, விடுவதா......என் மல்லிகாவையா?...? - பலவாருகச் சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொண்ட ராஜேந்திரன், இரவுடன் இரவாக வீடு வந்தான். திரும்பும் பயணத்தில் உருவாகியிருந்த தன் முடிவை வெளியிட்ட தும், ஒருகணம் ஆனந்தனும் மங்களமும் அடித்துவைத்த பொம்மைகளாயினர். முடிவு ! அடுத்த நாள் மதுரைக்குக் கடிதம் பறந்தது. அதை ஆனந்தன் எழுதியிருந்தான். ராஜேந்திரனது மனமாற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/71&oldid=835618" இலிருந்து மீள்விக்கப்பட்டது