பக்கம்:பூ மணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காரணமாக மல்லிகாவுடன் நடக்கவிருந்த மணவினேக்கு அவன் இசையவில்லே என்பது அதில் குறிக்கப்பட் டிருந்தது. நாட்கள் வந்தன ; இருந்தன ; போயின. ராஜேந்திரன், பழைய ராஜேந்திரனுக இல்லே. படங் களில் காதலியை இழந்து தவிக்கும் காதலனேச் சித்திரித் துக் காட்டுவார்களே, அம்மாதிரி அவன் காணப்பட்டான். உண்ணவில்லே உறங்கவில்லே. உயிர் தன் போக்கிற்கு உடலுடன் இழைந்திருப்பதைப் போலத்தான் அவன் தோன்றினன். ஆனந்தனும் மங்களமும் அவனேக் கண்டு பயப்பட்டனர் ; அழுதனர். கலியாணத்திற்கு வந்திருந்த அன்பளிப்புகள், ஆசிச் செய்திகள் எல்லாம் மதுரையிலிருந்து திருப்பியனுப்பப்பட் டிருந்தன. ராஜேந்திரன் அனைத்தையும் பார்த்தான் ; ஆனல் அவற்றில் குறிப்பாக இரண்டை மட்டும்தான் படித்தான். பூங்குழலியின் சாதாரண வாழ்த்துத் தந்தி ஒன்று. அடுத்தது, பூமாவின் வாழ்த்துக் கடிதம். அதைப் படித்ததும் ராஜேந்திரனுக்கு அழுகை பீறிட்டது. என்ன நினைவோடியதோ? அன்று பூமாவும், உடல் நலம் பெற்ற அவள் தந்தையும் அவனத் தேடி வீடு வந்து போனதும் அப்போதுதான் தினேவில் பட்டுத் தெறித்தது. இமை கொட்டும் நேரம் ராஜேந்திரன் தன்னை மறந்த லவந்தன்னிலே வீற்றிருந்தான் சோபாவில். அவன் கண் ைேட்டத்தில் ஏனே அப்பொழுது பூங்குழலியும் பூமாவும் மாறி மாறிச் சுழல்வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். மாருத நினைவாக-மாற்ற இயலாத நினைவாக ! & அன்று இரவு ராஜேந்திரனது மேஜையில் ஆனந்தன் பெயருக்கு ஒரு துண்டுக் கடிதம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/72&oldid=835620" இலிருந்து மீள்விக்கப்பட்டது