பக்கம்:பூ மணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அண்ணு, நான் போகிறேன் கால்போன திக்கிலே. மல்லிகாவை மறுத்துவிட்டேன்; மறக்க முடியவில்லை. நான் புறப்பட்டு விட்டேன் கால் போன திசையிலே. -ராஜேந்திரன்.” புயல் இன்னமும் வீசிக்கொண்டுதான் இருந்தது. அதன் சுழல்வீச்சில் அங்கு கிடந்த ஏதோ ஒரு புத்தகத்தின் ஏடு காற்றில் பறந்தது. அதில் கீழ்க்கண்ட வார்த்தைகள் புன்னகை புரிந்தன. ‘‘காதல் பிறப்பதென்னவோ பூந்தென்றலில்தான் ; ஆனல் அதனே அடையும் வழியோ புயலும் குருவளியும் வீசிச் சுழலும் பயங்கரப்பாதை ; எரிமலையும் பூகம்பமும் வெடித்தெழும் பயங்கரப்பூமி 1 அந்தப் புயல், குருவளி, பூகம்பம், எரியில் எல்லாம் என்ருே ஒருநாள் அமைதி காணுகையில், தென்றல் படருகையில், அன்று பிறந்த காதல் கடைசியில் கதையாகப் போய்விடுவதுதான் மிக மிகப் பயங்கரமானது : '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/73&oldid=835622" இலிருந்து மீள்விக்கப்பட்டது