பக்கம்:பூ மணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கால் போன திசையில் புறப்பட்டு விட்டதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றதைக் கண்டதும், மங்கன மும் ஆனந்தமும் அலறித் துடித்தனர்; தெரிந்த இடமெல் லாம் தேடினர்கள். எங்கெல்லாம் அவன் சென்றிருக்கக் கூடுமென்று தான் ஊகித்த, தன் மனைவி ஊகித்துச் சொன்ன இடங்களுக்கெல்லாம் தந்திகள் அனுப்பிளுன் ஆனந்தன். ஆனல்...? ராஜேந்திரன் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந் தான். கால்போன போக்கிலே-ரயில் போன திசையிலே. அவன் கண் திறந்து, உணர்வையும் திறந்த வெளியாக்கிக் காட்சிப் பொருளையும் நிலையாக்கிப் பார்க்கும் சமயம், அவனுக்கு எல்லாமே கனவு போலத் தெரிந்தது. அவன் எதிரே அவனது உயிர்த் தோழன் சந்திரன் இருந்தான். விழிக் கண்ணிருடன் சந்திரனேப் பார்த்ததும், ராஜேந் திரன் ஓ'வென்று அலறிவிட்டான். ராஜேந்திரனின் இத்த கைய பயங்கரக் கோலத்தைக் கண்ட சந்திரனும் அழுது விட்டான். சந்திரனேக் கண்டதும் அவனுக்குப் பெரும் ஆறுத லாக இருந்தது. அதே சமயம், அவன் உரு பூமாவின் உருவைக் கொணர்ந்து ராஜேந்திரன் மனதில் நிறுத்திற்று. அன்ருெரு நாள், சந்திரனுக்குத்தானே பூமாவைத் திருமணம் செய்து கொடுக்க இவன் தீர்மானம் பண்ணி விருந்தான் ஆல்ை...... r ராஜேந்திரன் தன் கதையைச் சொன்னன். சந்திர னுக்கு அவன் கதை, கதைபோலத்தான் பட்டது. வாழ்க்கை என்ருலே நடந்த கதை, நடக்கும் கதைக்கு எடுத்துக் காட்டாக அமையப் பெறும் நீதி போதை தானே......! . சந்திரனுக்கு பூவைமா நகரில் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் வேலை. அவன் கால் வைத்த வேனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/77&oldid=835630" இலிருந்து மீள்விக்கப்பட்டது