பக்கம்:பூ மணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மேற்பார்வையாளர்கள் கால் வைத்து அந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்தை ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்’ ஆக மாற்றினுர்கள். சந்திரன் ஆரும் வகுப்பு ஆசிரியர். அவன் என்ருல் மாணவர் குழாமிற்குத் தனித்த ஈடுபாடு. அழகிய தனித் தமிழில் அவன் பேசும் அன்பு அறிவு மொழிகள் அவனிடம் அமைந்த வசிய மருந்து. சந்திரன், ராஜேந்திரனுக்குத் தொடக்க நாளேயப் பள்ளித்தோழன். உறவு வேறு அவர்களது பிணேப்பிற்கு உயிரளிப்பாக அமைந்தது. ராஜேந்திரன் வெறும் உயிர்க் கூடாகத்தான் தோற்ற மளித்தான். அவன் நிலே பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. தன் முதற்காதல்’ ஈடேறவில்லேயே என்ற துன்பதினேவு, மனச்சாட்சியாக நின்று அவனேக் கூண்டில் நிறுத்தி வைத்துக் குற்றப் பத்திரிகை படித்தது. அது அவனே வாள்கொண்டு அறுத்தது. அவன் கண்களில் உதிரம் ஊற்றுப் புனலாகக் கரைந்தது, அதே சமயம், அழகொழிந்து தேய்ந்துபோன மல்லி காவை நினைக்கவும், அவன் நெஞ்சம் துணுக்குற்றது. எந்நேரமும் எதையோ இழந்து விட்டவனேப் போல ஏங்கி நின்ருன் அவன். எதிர்காலக் கனவு வாழ்நாளேத் தான் இழந்துவிட்டதாகத் தேம்பினன். வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லான் அவன். அவனுக்கு முகத்தில் களே இல்லை; உதட்டில் சிரிப்பில்லை; கண்ணில் கனவுக் கோலமும் கிடையாது. வீணே வீற்றிருந்தான். எங்கோ அந்தகாரத்தில் பெருவெளிச்சூன்யத்தில் அவன் நோக்கு நிலக்கப்பட்டிருந்தது. பிரமை பிடித்தவன் போலிருந்: தான் ராஜேந்திரன். * அவனுடைய இத்தகைய விபரீத மனமாற்றத்தை, நிலைமாற்றத்தைக் கண்ட சந்திரன், அவனுக்கு மனமாற்றம் அளிக்கும் வகைக்கெல்லாம் அவனைத் திருப்பினுன். சந்திரன் பள்ளிக்கூடம் செல்லும் வரையிலும், பள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/78&oldid=835632" இலிருந்து மீள்விக்கப்பட்டது