பக்கம்:பூ மணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மாற்றப் புதுவாழ்வு தர முடிவுகண்டு விட்டேன். புதுவாழ்வு தரத்தான் பூவை பூமா வந்திருக்கிருள். அது ஒன்றே உன் மாற்றத்திற்கு மருந்து. உன் பர்ஸிலிருந்த பூமாவின் போட்டோவில் படிந்திருந்த உன் கண்ணிரின் ஒவ்வொரு துளியும் நீ அவள்பால் வைத்திருக்கும் அன்பை, காதலைச் சொல்லக் கேட்டேன்...ராஜா, என்ன யோசிக்கிருய்? அவர்கள் மூவர் வாழ்வும் உன் வாழ்வின் வளத்தில் இருக்கிறதென்பதை மட்டும் மறந்து விடாதே...?? 'சந்திரா, பூமாவை அன்று உன்னிடம் ஒப்படைக்கக் கனவு கண்டேன். ஆளுல் இன்று...?? அதே பூமாவை நான் உங்களிடம்-உரிமையாளரிடம் உங்கள் முறைமைப் பெண்ணே ஒப்படைக்கக் கனவு காணு கிறேன்: மங்களமும், ஆனந்தமும் நீர்மல்க அவனைக் கெஞ்சி ஞர்கள். - பூமா, ராஜேந்திரனுக்குக் கி ைட த் த ள். பூமா ராஜேந்திரனின் நற்பாதி’யாக ஆள்ை. அவள் மிஸஸ் ராஜேந்திரன் ! ராஜேந்திரனுக்குப் புதுத்தெம்பு ஊறியது; முகத்தில் பழைய களே தட்டியது; கண்களில் தெளிந்த அமைதி கண்டது. புது வாழ்வின் பூரிப்பும் மிதப்பும் அவன் பெற்ருன். இந்த மகிழ்ச்சிமிக்க நல்ல முடிவைக் காண மங்களமும் அவள் கணவனும் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிருர்கள்? எவ்வளவு கண்ணிர் சிந்தியிருக்கிருர்கள்? பூமாவை ராஜேந்திரனுக்குத் தேடிக் கொடுத்த பெருமையும் அவ களயே சாரும். இதற்காக ஆனந்தன் நன்றி சொன்னன். உடன் பிறந்த பாக்கியத்துக்குக் கடமைஎன்ற பண்பாட்டில் ராஜேந்திரன மனிதன் ஆக்கியதில் ஆனந்தனுக்கு மிக மிக ஆறுதல்-ஆனந்தம். முறைப்பெண் பூமாவை முறை இடத்தில் முடித்து வைத்து விட்டதில் அவன் பரவச மடைந்தான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/80&oldid=835637" இலிருந்து மீள்விக்கப்பட்டது