பக்கம்:பூ மணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

او و گویی ک ک ராஜேந்திரன் அழைத்தான். மழைத் துளிகளுக்குத் தானே சாதகபட்சி தவங்கிடக்கிறது? கையில் காப்பியுடன் வந்தாள் பூமா. காப்பியைப் பருகிய அவன் கள்ளத்தனமாக அவள் எழிற்பெருக்கையும் சேர்த்துப் பருகினன். பூமா அறியமாட்டாளா என்ன? அவள் பெருமைப்பட்டாள். தன் அழகு அந்தஸ்து பெற்று ரசனேக்குப் பாத்திரமாவதறிந்து-அதுவும் தன்னே உரிமை கொண்டிருக்கும் பதியின் மூலம், . அத்தான், நம்முடைய கல்யாண போட்டோ பத்திரிகையிலே வந்திருக்கிறதே...?? என்ருள் பூமா தன் கணவனிடம். 'ஒஹோ, ரொம்ப சந்தோஷம். நான் முதலிலேயே பார்த்துவிட்டேன். இன்னுமொரு நல்ல சேதி. எம்ப்ளாய் மெண்ட் எக்ஸ்சேஞ்சி” விருந்து எனக்கு ஒரு வேலேக்கு உத்தரவு வந்திருக்கிறது. மதுரை டி. இ. ஒ. ஆபீசில் வேலை. வருகிற வாரம் வேலை ஒப்புக்கொள்ளவேண்டும். குடும்பத்தையே அங்கு செட்டில் செய்யனும். அப்போது தான் சரிக்கட்டிவரும். உன் அப்பாவிடம் இருந்தபோதே தான் இந்தப் பட்டனவாசம் உனக்குக் கசந்துவிட்டதே: பூமா, என்ன உன் யோசனை...??? - உங்கள் இஷ்டம் என் பாக்கியம். ? பேஷ், சினிமாவில் பேசுவதுபோலச் சொல்லு கிருயே...?? . அவள், அப்போதுதான் உதயமாகும் நிலவுக்கன்னி போலச் சிரித்துக் கொண்டாள். z ஆபீஸ் முடிந்து வந்த ஆனந்தன், தம்பிக்கு வேலே ஆகி வந்த செய்தியை அறிறது குதுகலித்தான். இச்சேதி மங்களத்துக்கு ஒரே மகிழ்வைத் தந்ததென்பதைச் சொல்லவே தேவையில்லே. ஆனாலும், பூமாவையும்.ராஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/81&oldid=835638" இலிருந்து மீள்விக்கப்பட்டது