பக்கம்:பூ மணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வையும் பிரியவேண்டுமே என்ற நிலையை அவள் பெண் உள்ளம் உணருங்காலேயில், அவளுக்குத் துயரம் நெஞ்சை உலுக்கி விட்டது. நெஞ்சு மலேயாகக் கனத்து, தாங்க வொண்ணுத ஏதோ ஒர் துயர ஊசி இதயத்தைக் குடை வதைப் போன்று அவள் தவித்தாள். பழகிப் பிரிவ தென்ருல் அது தரும் துயரம் அளவிட முடியாததுதான். 'அக்கா-அக்கா என்று வாய் நிறையக் கூப்பிடும் பூமாவின் அழைப்பில் இன்பங் கண்டாள் மங்களம். தனக்கு உடன்பிறந்த தங்கை ஒருத்தி இருந்தால் எப்படி அன்பு செலுத்துவாளோ, அவ்விதமே பூமாவினிடமும் மங்களம் அன்பு சொரிந்தாள், அண்ணி-அண்ணி’ என்று அழைத்துப் பழகிய மைத்துனன் ராஜேந்திர னுடைய தூய அன்பிற்கு, பாசத்திற்கு இலக்காகி, அவன் இதயத்திலே தனி இடம் அமைத்துக் கொண்டவளாயிற்றே அவள் இரு குடும்பங்கள் ஒரே தலைவன் கீழ் அழகாக நடந்துவந்ததில் அவர்கள் மனதிற்குள் எவ்வளவு தூரம் மகிழ்ந்திருந்தார்கள்! அதற்குச் சோதனையா இது? 'ராஜாவும் பூமாவும் சிலநாளில் புறப்பட்டுவிடுவார்கள். இனி அந்தச் சிரிப்பு இராது; கொம்மாளம் இராது; வேடிக்கைப் பேச்சும், தமாஷ-ம் இருக்காது. வீடு வெறிச் சோடிப் போய்விடும். அவரும் ஆபீஸ் சதமென்று இருந்து விட்டுப் பொழுதிற்குத்தான் திரும்புவார். அதுவரை நான் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்... என்று தனக்குள் வருந்திக் கொண் டிருந்த மங்களத்திற்குக் கண்கள் தழும்பின. போனலும் ஒரு மாதம் கழித்து லெட்டர் போட்டு வர வழைத்து ஒரு வாரமாவது அவர்களே வீட்டில் விருந்தின ராக வைத்துக்கொள்ளவேணும். மன சிற்கு அப்போது தான் ஆறுதல் ஏற்படும்...' என்ற யோசனையில் கண்ட அமைதியை அனுபவித்தவாறு இருந்த மங்களத்திற்கு 'அக்கா என்று பூமா அலட்டுவது கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/82&oldid=835640" இலிருந்து மீள்விக்கப்பட்டது